இந்தியாவையே கலக்கப் போகும் புதிய எஸ்யூவி.. இப்போவே புக்கிங்கை தொடங்கிய டீலர்கள்..!
இந்த ஜூலை மாதம் இந்தியாவில் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது கியா. அது தொடர்பான டீஸர் வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் புதிய பேட்டரி எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார்களின் வெளியீடுகள் குறித்து அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. அவை என்ன கார்கள் என டீஸரில் கியா குறிப்பிடவில்லை. ஆனால் அவை என்ன கார்கள் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்தது தான்.
சிராஸ் EV மற்றும் சொரேன்டோ ஹைபிரிட் ஆகிய இரண்டு புதிய எஸ்யூவிக்களையே கியா இந்தியாவில் வெளியிடவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை கியா வெளியிடவில்லை. எனினும் டீலர்களுடனான சந்திப்பின் போது இந்தக் கார்களையே இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகக் கூறப்பட்டதாகத தகவல் வெளியாகின. மேலும், இந்தியாவில் இந்தக் கார்கள் சோதனை செய்யப்பட்ட போது பலமுறை ஸ்பைஷாட்டில் சிக்கி காட்டிக் கொடுத்துள்ளன.

இந்த இரண்டு கார்களின் வெளியீடும் கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில், சொரென்டோ ஹைபிரிட் (Sorento Hybrid) எஸ்யூவிக்கான முன்பதிவுகளை சில டீலர்ஷிப்கள் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த எஸ்யூவிக்கான முன்பதிவு தொடங்கப்படவில்லை. சில டீலர்ஷிப்கள் தாங்காளாகவே தனிப்பட்ட முறையில் இந்த முன்பதிவுகளைத் தொடங்கியிருக்கின்றன. இது இந்த சொரென்டோ ஹைபிரிட் எஸ்யூவியின் வெளியீட்டை மேலும் உறுதி செய்கிறது.
இந்தியாவில் கியா விற்பனை செய்து வரும் செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் ஆகிய எஸ்யூவி மற்றும் எம்பிவிக்களுக்கு மேலாக புதிய சொரென்டோ பிளேஸ் செய்யப்படும் எனத் தெரிகிறது. அந்த வகையில் மாஸ் மார்க்கெட் பிரிவில் கியாவில் சற்று விலை உயர்ந்த ப்ரீமியம் காராக இந்த சொரென்டோ இருக்கும். மூன்று வரிசையாக 6 அல்லது 7 சீட்கள் லேஅவுட்டை இந்தக் கார் கொண்டிருக்கும்.

அப்படியென்றால் மஹிந்திரா XUV 7XO மற்றும் டாடா சஃபாரிக்குப் போட்டியான காராக இருக்குமா என்றால், அப்படித் தான் முதலில் இந்தக் கார் இந்தியாவிற்குக் கொண்டு வரப்படுவதாகக் கூறப்பட்டது, ஆனால் தற்போதைய தகவல்களை வைத்துப் பார்க்கும் போது அவற்றை விட பெரிய காராக, ப்ரீமியமான காராக சொரேன்டோ இருக்கும் எனத் தெரிகிறது.
ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வாகன் டேரான் மற்றும் ஜீப் மெரிடியன் உள்ளிட்ட கார்களுக்குப் போட்டியாக புதிய கியா சொரென்டோ இருக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 4,815 மிமீ நீளம் 1,900 மிமீ அகலம், 1,700 மிமீ உயரம் மற்றும் 2,815 மிமீ வீல்பேஸுடன் நல்ல இடவசதி கொண்ட பெரிய எஸ்யூவியாக சொரென்டோ இருக்கும். மேலும், அனைத்து விதமான ப்ரீமியம் அம்சங்களையும் இந்தக் காரில் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவிலேயே இந்தக் கார் மேற்கூறிய கார்களை விட குறைவான விலையையே புதிய கியா சொரென்டோ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 25 லட்சம் ரூபாயை ஒட்டிய தொடக்க விலையில் இந்த எஸ்யூவியின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம். கியாவின் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது 20 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய்க்குள்ளான தொடக்க விலையில் கூட எதிர்பார்க்கலாம். கிய என்ன திட்டமிட்டிருக்கிறது என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
4,600 மிமீ நீளத்திற்கு மேல் செல்லும் போதே இந்திய வாடிக்கையாளர்களுக்கான சாய்ஸ் ரொம்பவுமே குறைந்துவிடுகிறது. மிகவும் சில எஸ்யூவிக்கள் மட்டுமே அங்கே விற்பனையில் இருக்கின்றன. அதுவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் பிராண்டுகளின், விரும்பத்தக்க வகையிலான கார்கள் அங்கே இல்லை. அந்த வகையில் கியாவின் இந்தப் புதிய எஸ்யூவி மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. 4,600 மிமீ அளவிலான எஸ்யூவிக்களை ஒட்டி இருக்கும் வாடிக்கையாளர்களை பெரிய எஸ்யூவிக்களை நோக்கி ஈர்க்க இந்தக் கார் உதவும்.


Click it and Unblock the Notifications