மாருதி எர்டிகா காரை வாங்குறவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! 7-சீட்டர் காரை புதுசா களமிறக்கும் கியா!

கியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பல புதிய கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், சொரெண்டோ ஆகும். 7 பேர் அமரக்கூடிய எஸ்யூவி வகை காராக விளங்கும் சொரெண்டோ இந்திய சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு சொரெண்டோ கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஸ்பை படங்கள் 'டீம் பிஎச்பி' செய்தித்தளம் மூலமாக நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தென் கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கியா சொரெண்டோ இந்தியாவில் காட்சித்தருவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் சொரெண்டோ கார் ஒன்று இவ்வாறு முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு இருந்தது.

kia sorento suv car spotted

தற்போதைய சோதனை ஓட்டம் டெல்லியில் நடத்தப்பட்டு இருந்தாலும், சோதனை ஓட்ட சொரெண்டோ காரில் மஹாராஷ்டிரா மாநில புனே நகர நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த நம்பர் பிளேட் ஆனது கார் நிறுவனங்கள் மற்றும் ஷோரூம்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் தற்காலிக நம்பர் பிளேட் ஆகும்.

இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், இந்தியாவிற்கான சொரெண்டோவின் முன் மற்றும் பின்பக்க தோற்றம் குறித்த ஒரு ஐடியா நமக்கு கிடைக்கிறது. அதன்படி, முன்பக்கத்தில் இந்த கார் புலி மூக்கு டிசைனிலான கிரில்லை பெற்றுவரும் என எதிர்பார்க்கலாம். கதவு கைப்பிடிகள் பெரியதாக ஆடம்பரம் இல்லாமல் வழக்கமானதாகவே இருக்கும் என தெரிகிறது.

kia sorento suv car spotted

இந்த காரில் பெரியளவில் 19-இன்ச் அலாய் சக்கரங்களில் 235-பிரிவு டயர்கள் வழங்கப்படும் என்பதை முந்தைய ஸ்பை படங்கள் வெளிக்காட்டி இருந்தன. சொரெண்டோவின் முன் மற்றும் பின்பக்கத்தில் ஸ்டைலிஷான டிசைனில் விளக்குகள் வழங்கப்படுகின்றன. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், கியா சொரெண்டோ 4815மிமீ நீளம், 1900மிமீ அகலம், 1700மிமீ உயரம் மற்றும் 2815மிமீ நீள வீல்பேஸை கொண்டுள்ளது.

தரைக்கும் காரின் அடிப்பகுதிக்கும் இடையேயான உயரம் 175மிமீ ஆகும். சொரெண்டோ காரினுள் 6 அல்லது 7 இருக்கைகளை பெறும் வகையில் கேபின் வழங்கப்படும். இந்த இரண்டில் எந்த ஆப்ஷனில் வாங்கினாலும் மூன்று வரிசைகளில் இருக்கைகள் கிடைக்கும். இதன் மூலமாக, இந்தியாவில் கியாவின் முதல் விலை குறைவான 3-வரிசை இருக்கை எஸ்யூவி காராக சொரெண்டோ விளங்க உள்ளது.

பிரீமியம் உணர்விற்காக இந்த காரினுள் மென்மையான மெட்டீரியல்களில் கேபின் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. தொழிற்நுட்ப அம்சங்களாக, போஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டம், வெண்டிலேட்டட் இருக்கைகள், பனோராமிக் சன்ரூஃப், மல்டி-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ADAS உள்ளிட்டவை சொரெண்டோவில் வழங்கப்படுகின்றன. வழக்கமான கார்களை போல் இல்லாமல், சொரெண்டோ ஆனது எலெக்ட்ரிக் பவரில் இயங்கக் கூடியதாக வழங்கப்படுகிறது.

அதாவது, முழுவதுமாக பெட்ரோல் அல்லது டீசல் என்ஜினில் மட்டும் இயங்கக்கூடியதாக இல்லமல், என்ஜின் + எலெக்ட்ரிக் மோட்டார் என்கிற ஹைப்ரீட் வெர்சனில் சொரெண்டோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. அல்லது, முற்றிலுமாக எலெக்ட்ரிக் பவரில் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் காராக சொரெண்டோ இவி அறிமுகம் செய்யப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனையில் ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வேகன் டிகுவான், ஜீப் மெரிடியன் கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்படுவதால், கிட்டத்தட்ட அவற்றின் விலையில் புதிய கியா சொரெண்டோவை எதிர்பார்க்கலாம். ஹைப்ரீட் வெர்சனில் மட்டுமே வர உள்ளதால், அவற்றை காட்டிலும் அதிக விலையில் சொரெண்டோ அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருவதால் கியா சொரெண்டோவின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Thursday, May 14, 2026, 16:14 [IST]
English summary
Kia sorento suv car spotted again in india ahead of launch check all details here
மேலும்... #kia motors #spy pics #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+