சைரோஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் மழை.. ஒரே நாளில் 150 கார்களை டெலிவிரி ... சாதனைப் படைத்த கியா டீலர்!
அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா சைரோஸ் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பரைசாற்றும் விதத்தில், கேரளம் மாநிலம், கொச்சியில் உள்ள கியா டீலரில் ஒரே நாளில் 150 கியா சைரோஸ் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை நெருங்கி வரும் இந்நேரத்தில், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் இந்த கார்களை வழங்குவதற்காக பிரம்மாண்ட நிகழ்ச்சியை கொச்சியில் உள்ள இன்ச்சியோன் கியா மோட்டார் நிறுவனம் செய்திருந்து. இந்த நிகழ்ச்சியில் கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் க்வாங்கு லீ மற்றும் இஞ்சியோன் கியா டீலரின் உயர் அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இது ஒரு சாதனை நிகழ்வாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரே நேரத்தில் ஒரே மாடலை சேர்ந்த 150 எலெக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்ட நிகழ்வானது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து இன்ச்சியோன் டீலர் அதிகாரிகள் கூறுகையில்,"அறிமுகம் செய்யப்பட்டது முதலே கியா சைரோஸ் எலெக்ட்ரிக் காருக்கு அதிக வரவேற்பும், புக்கிங் கிடைத்து வருகிறது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே எங்களுக்கு 100 பேர் முன்பதிவு செய்தனர்.

மேலும், ஆகஸ்ட் 3ந் தேதி இந்த காரை எங்களது கொச்சி ஷோரூமில் அறிமுகம் செய்த தருணத்தில் மட்டும் 300 பேர் முன்பதிவு செய்து காத்திருந்தனர். இந்த நிலையில், தற்போது இந்த காருக்கு 650க்கும் மேற்பட்ட புக்கிங் கிடைத்துள்ளது. இதன்மூலமாக, சைரோஸ் இவிக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியா சைரோஸ் எலெக்ட்ரிக் மாடலானது ரூ.13.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் கார் 42kWh மற்றும் 51.4kWh பேட்டரி பேக்குகளில் கிடைக்கிரது. மேலும், பேட்டரியை சந்தா மூலமாக பெறும் திட்டமும் உள்ளது. அவ்வாறு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பேட்டரியை தவிர்த்து, காருக்கு மட்டும் ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் நிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு ஒரு கிலோமீட்டர் பயணித்தால் 3.30 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த எலெக்ட்ரிக் கார் வசதிகளையும், பேட்டரி பேக்குகளையும் பொறுத்து HTK, HTK+, HTX, HTX+ மற்றும் X-Line ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த கார் கிளேசியர் ஒயிட், ஃப்ராஸ்ட் புளூ, கிராவைட் க்ரே, பியூவ்டர் ஆலிவ், மேக்மா ரெட், ஐவரி சில்வர் மேட், ஐவரி சில்வர் க்ளாஸ் மற்றும் அரோரோ பிளாக் பியர்ல் ஆகிய 9 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபளிட்டி கன்ட்ரோல், லெவல் 2 அடாஸ், டியூவல் கேமரா டேஷ்கேமரா, பின்புறத்தில் சாய்ந்து கொள்ளும் வசதியுடன் இருக்கை அமைப்பு, முன்புறத்தில் வென்டிலேட்டட் இருக்கைகள் கொடுக்கப்படுகின்றன. இதன் 42kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 443கிமீ தூரமும், 51.4kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 526 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 3 ஆண்டுகளில் 80 சதவீதம் ரீசேல் மதிப்புடன் திரும்ப பெறும் திட்டத்தையும் நிபந்தனைகளுடன் கியா மோட்டார் இந்தியா நிறுவனம் வழங்குகிறது. புதிய கியா சைரோஸ் கார் டாடா பன்ச் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
