கியா சைரோஸ் EV வாங்கப் போறீங்களா? இந்த 7 வேரியண்ட்டுகளில் உங்களுக்கு எது சிறந்த தேர்வாக இருக்கும்?

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கியா தனது புதிய சைரோஸ் EV மாடலை அறிமுகப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளது. பாக்ஸி (Boxy) SUV வடிவமைப்பு, நீண்ட பயண தூரம், பிரீமியம் கேபின், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பல்வேறு வேரியண்ட் தேர்வுகள் ஆகியவற்றுடன் வந்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் SUV, டாடா நெக்ஸான் EV, எம்ஜி விண்ட்சர் EV, மகிந்திரா XUV 3XO EV போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது.

இந்த காரின் தொழில்நுட்ப மற்றும் வசதிகள், வேரியண்ட்டுகள் குறித்த விபரங்களை கியா இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் வேரியண்ட் வரிசைதான். இந்த கார் மொத்தம் 7 வேரியண்ட்களில் கிடைக்கும். மேலும், 42 kWh மற்றும் 51.4 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் கிடைக்கிறது. எந்த வேரியண்டில் என்னென்ன வசதிகள் கிடைக்கின்றன? எந்த மாடல் யாருக்கு பொருத்தமானது? எந்த வேரியண்ட் பணத்திற்கு சிறந்த மதிப்பை வழங்குகிறது? என்பதை விரிவாக பார்க்கலாம்.

Kia Syros EV

இரண்டு பேட்டரி தேர்வுகள்

கியா சைரோஸ் EV இரண்டு விதமான பேட்டரி தேர்வுகளுடன் கிடைக்கிறது. 42 kWh பேட்டரியுடன் வரும் ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மாடல்கள், ஒரு முழு சார்ஜில் 443 கிலோமீட்டர் (MIDC) வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த பேட்டரியுடன் இணைக்கப்பட்டு இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 135 எச்பி பவரையும், 255 Nm டார்க்கை வழங்கும்.

அதிக தூரம் பயணம் செய்பவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 51.4 kWh எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் பேட்டரி, 526 கிலோமீட்டர் (MIDC) வரை பயணிக்கும் திறனை வழங்குகிறது. இதனுடன் வழங்கப்பட்டு இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 171 PS பவரையும், 255 Nm டார்க்கை வழங்கும்.

மேலும், 100 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் 10% முதல் 80% வரை வெறும் 39 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். AC சார்ஜிங் வசதியாக 7.4 kW மற்றும் 11 kW சார்ஜர்களுக்கும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. (குறிப்பு: Wall Charger காருடன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படாது; தனியாக வாங்க வேண்டும்.)

HTK - குறைவில்லா வசதிகளுடன் பேஸ் வேரியண்ட்

சைரோஸ் EV வரிசையின் ஆரம்ப வேரியண்டான HTK-யில் 42 kWh பேட்டரி மற்றும் 443 கிமீ ரேஞ்ச் வழங்கப்படுகிறது. அடிப்படை வேரியண்ட் என்றாலும், 30-இன்ச் Trinity Panoramic Display (12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் + 12.3-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் + 5-இன்ச் கிளைமேட் டிஸ்ப்ளே), வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, ஆறு ஏர்பேக்குகள், ESC, ABS, TPMS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், Shift-by-Wire, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், டிரைவ் மோட்கள் மற்றும் போர்டபிள் சார்ஜிங் கேபிள் போன்ற முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

HTK+ - தினசரி பயன்பாட்டுக்கு சிறந்த தேர்வு

HTK+ வேரியண்டும் 42 kWh பேட்டரி மற்றும் 443 கிமீ ரேஞ்சுடன் கிடைக்கிறது. HTK-யுடன் ஒப்பிடும்போது, ஸ்மார்ட் கீ, புஷ் பட்டன் ஸ்டார்ட், பின்புற வரிசை இருக்கை பயணிகளுக்கு ரியர் ஏசி வென்ட்டுகள், ஆட்டோ ஹோல்டு வசதியுடன் பார்க்கிங் பிரேக், பின்புற ஜன்னல்களுக்கு ஷன்ஷேடு மற்றும் கூடுதல் USB Type-C சார்ஜிங் போர்ட்கள் உள்ளிட்ட வசதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் அதிக வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.

HTX - மிட் வேரியண்ட்டில் பிரீமியம் அனுபவம்

HTX வேரியண்டிலும் 42 kWh பேட்டரி மற்றும் 443 கிமீ ரேஞ்ச் வழங்கப்படுகிறது. இந்த வேரியண்டின் முக்கிய அம்சங்களாக பனரோமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரியர் டீஃபாகர் மற்றும் 100W USB Type-C Fast Charger போன்றவை இடம்பெற்றுள்ளன. ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மாடல்களில் அதிக வசதிகளை விரும்புபவர்களுக்கு HTX மிகவும் பொருத்தமான வேரியண்டாக இருக்கும்.

HTK+ ER மற்றும் HTX ER - நீண்ட தூர பயணங்களுக்கு பெஸ்ட்

அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்க விரும்புபவர்களுக்காக HTK+ ER மற்றும் HTX ER வேரியண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டிலும் 51.4 kWh பேட்டரி வழங்கப்பட்டு, 526 கிலோமீட்டர் MIDC ரேஞ்ச் கிடைக்கும். இதில் HTX ER வேரியண்டில் கூடுதலாக Kia Connect 2.0, 95-க்கும் மேற்பட்ட Connected Car Features, Over-the-Air (OTA) Software Updates மற்றும் Remote Battery Conditioning போன்ற தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்படுகின்றன.

HTX+ ER - பிரீமியம் வேரியண்ட்

HTX+ ER வேரியண்டில்தான் சைரோஸ் EV உண்மையான பிரீமியம் அனுபவத்தை வழங்கத் தொடங்குகிறது. 51.4 kWh பேட்டரியுடன் 526 கிமீ ரேஞ்ச் வழங்கப்படும் இந்த வேரியண்டில் 12.3-இன்ச் இன்ஃபோடெயிடன் ஸ்க்ரீன், ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், குளிர்ச்சியை வழங்கும் வென்டிலேட்டட் இருக்கை வசதி, டேஷ்கேமரா, செயற்கை லெதருடன் இன்டீரியர் அமைப்பு மற்றும் Auto Anti-glare IRVM போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

X-Line ER - டாப் வேரியண்ட்

அனைத்து வசதிகளுடன் கூடிய சைரோஸ் EV வரிசையின் டாப் வேரியண்ட் X-Line ER ஆகும். இதிலும் 51.4 kWh பேட்டரி மற்றும் 526 கிமீ ரேஞ்ச் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த வேரியண்டின் மிகப்பெரிய பலம் Level-2 ADAS பாதுகாப்பு தொகுப்பு என்பதுதான். இந்த வேரியண்ட்டில் 16 ADAS பாதுகாப்பு அம்சங்கள் மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும். தவிரவும், 360 டிகிரி கேமரா, Blind View Monitor, Digital Key, Internal Vehicle-to-Load (V2L), 64 நிற ஆம்பியண்ட் லைட் சிஸ்டம், படூல் லைட் சிஸ்டம் மற்றும் விசேஷ வண்ணக்கலவையுடன் டியூவல் டோன் இன்டீரியர் போன்ற பிரத்யேக அம்சங்கள் X-Line-ல் மட்டுமே கிடைக்கின்றன.

எந்த வேரியண்ட் யாருக்கு பொருத்தமானது?

நீங்கள் அலுவலகம் அல்லது தினசரி நகர்ப்புற பயன்பாட்டிற்கு அதிக தேவை இருப்பின் HTK வேரியண்ட் போதுமானதாக இருக்கலாம். சற்றே கூடுதல் வசதிகளுடன் சிறந்த Value for Money வேண்டுமெனில் HTK+ தேர்வு செய்யலாம். Panoramic Sunroof உள்ளிட்ட பிரீமியம் அம்சங்கள் வேண்டுமெனில் HTX பொருத்தமானது.

அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்கும் சூழல் இருப்பின், அதிக ரேஞ்ச் கொண்ட HTK+ ER வேரியண்ட் சிறந்ததாக இருக்கும். Harman Kardon ஆடியோ, வென்டிலேட்டட் சீட்கள் போன்ற பிரீமியம் வசதிகளுக்கு HTX+ ER சிறந்தது. அதேநேரத்தில், பட்ஜெட் எனக்கு பிரச்னை இல்லை; மிகச் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் நீண்ட தூர பயணங்களுக்கு ADAS, Digital Key, V2L உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் கொண்ட X-Line ER தான் முழுமையான தேர்வாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

கியா சைரோஸ் EV-யின் பலம் அதன் பேட்டரி திறன் மட்டுமல்ல; ஒவ்வொரு விலை நிலைக்கும் ஏற்ற வகையில் வேரியண்ட்கள் தேர்வுக்கு இருப்பதுதான். அடிப்படை HTK வேரியண்டிலேயே தேவையான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில், மேல் வேரியண்ட்களுக்கு செல்லச் செல்ல Connected Car தொழில்நுட்பம், பிரீமியம் கேபின், Harman Kardon ஆடியோ, வென்டிலேட்டட் சீட்கள், Level-2 ADAS போன்ற வசதிகள் தெளிவான அப்கிரேட்களாக கிடைக்கின்றன. 443 கிமீ மற்றும் 526 கிமீ MIDC ரேஞ்ச், 39 நிமிட DC ஃபாஸ்ட் சார்ஜிங் திறன், 95+ Connected Features மற்றும் X-Line ER-ல் வழங்கப்படும் முழுமையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவை, இந்திய எலெக்ட்ரிக் SUV சந்தையில் கியா சைரோஸ் EV-யை மிகவும் வலுவான போட்டியாளராக மாற்றுகின்றன. இந்த கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 23ம் தேதி விலை அறிவிப்பு வெளியாக உள்ளது.

Article Published On: Monday, July 20, 2026, 11:57 [IST]
English summary
Kia syros ev all 7 variants explained 42kwh 51 4kwh battery range features
மேலும்... #electric car #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out