புக்கிங் துவங்கியாச்சு... கியாவின் புதிய எலெக்ட்ரிக் காரை எந்த வேரியண்ட்டில் புக் செய்வது?
கியா சிரோஸ் EV அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. கியாவின் புதிய எலெக்ட்ரிக் காராக களமிறக்கப்படும் இது ஏற்கனவே விற்பனையில் உள்ள சிரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்சன் ஆகும். HTK, HTK+, HTX, HTX+ மற்றும் எக்ஸ்-லைன் என ஐந்து விதமான வேரியண்ட்களில் சிரோஸ் EV விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெளிப்புறம்
சிரோஸ் EV காரின் அனைத்து வேரியண்ட்களிலும் LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்களை பெறலாம். இதேபோல், ரூஃப் ரெயில்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, பின்பக்க ஸ்பாய்லர், ஃபாக் விளக்குகளையும் இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் பெறலாம். ஆனால், அலாய் சக்கரங்கள் வேரியண்ட்களை பொறுத்து 16 இன்ச் அல்லது 17 இன்ச்சில் கிடைக்கும். தன்னிச்சையாக வெளியே வரக்கூடிய கதவு கைப்பிடிகள் டாப் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உட்புறம்
சிரோஸ் EV காரின் உட்புறத்தில் சில முக்கிய அம்சங்களை டாப் வேரியண்ட்களில் மட்டுமே பெற முடியும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், லெதரெட் இருக்கைகள் காரின் டாப் வேரியண்ட்களான HTX+ மற்றும் எக்ஸ்-லைன்-இல் மட்டுமே கிடைக்கும். அதுவே, விலை குறைவான வேரியண்ட்களில் செமி-லெதரேட் இருக்கைகள் மட்டுமே கிடைக்கும்.
இதேபோல், லெதரேட்டால் மூடப்பட்ட ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் டோர்கார்ட்கள் & ஆர்ம்ரெஸ்ட்டையும் மேற்கூறப்பட்ட டாப் வேரியண்ட்களில் மட்டுமே பெற முடியும். அதுவே, கருப்பு & பச்சை நிற லெதரேட் இருக்கைகள், கேபினை சுற்றிலும் விளக்குகள், தரையில் விளக்குகள் உள்ளிட்டவற்றை எக்ஸ்-லைன் வேரியண்ட்டில் மட்டுமே பெற முடியும்.

தொழிற்நுட்ப வசதிகள்
12.3 இன்ச்சில் HD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, 12.3 இன்ச்சில் HD தொடுதிரை, 5 இன்ச்சில் தொடுதிரை உடன் ஆட்டோமேட்டிக் AC கண்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதி, கியர் ஷிஃப்ட்-பை-வயர் வசதி உள்ளிட்டவை சிரோஸ் EV காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில், இன்ஃபோடெயின்மெண்ட் தொடுதிரை ஆனது HTX+ மற்றும் எக்ஸ்-லைன் வேரியண்ட்களில் மட்டும் நவ் காக்பிட் ஆக கிடைக்கும்.
அதேபோல், இந்த டாப் வேரியண்ட்களில் சவுண்ட் சிஸ்டத்தையும் பிரீமியம் தரத்தில் ஹர்மன் கார்டன் சிஸ்டமாக பெறலாம். க்ரூஸ் கண்ட்ரோல், டைனமிக் அசிஸ்டன்ஸ் உடன் ரியர் வியூ பார்க்கிங் கேமரா, டயர்களில் காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு, விர்டியூவல் என்ஜின் சவுண்ட் சிஸ்டம், 95க்கும் அதிகமான வசதிகளை வழங்கக்கூடிய கியா கனெக்ட், இரு கேமராக்கள் உடன் ஸ்மார்ட் டாஷ்கேம் உள்ளிட்டவற்றையும் டாப் வேரியண்ட்களில் மட்டுமே பெற முடியும்.
சவுகரிய & பாதுகாப்பு அம்சங்கள்
ஜன்னல் கண்ணாடிகளை ஒரு தொடுதல் மூலமாக மேலே/கீழே இறக்கும் வசதி ஆனது HTK, HTK+ வேரியண்ட்களில் மட்டும் கிடைக்காது. அதேபோல், பின் இருக்கை வரிசையை 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கும் வசதி, பின் இருக்கை வரிசையில் கப் ஹோல்டர்கள் உடன் ஆர்ம்ரெஸ்ட், பேட்டரி ஹீட்டிங் சிஸ்டம், முன் & பின்பக்க வெண்டிலேட்டட் இருக்கைகள், 4 வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய பவர் சீட் உள்ளிட்டவற்றையும் இந்த இரு வேரியண்ட்களிலும் பெற முடியாது.
பேட்டரி ஆப்ஷன்ஸ்
சிரோஸ் EV காரில் 42kWh மற்றும் 51.4kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களை கியா நிறுவனம் வழங்கியுள்ளது. விலை குறைவான எண்ட்ரி-லெவல் HTK வேரியண்ட்டை 42kWh பேட்டரி உடன் மட்டும் பெற முடியும். HTK+ மற்றும் HTX+ வேரியண்ட்களை மேற்கூறப்பட்ட இரு பேட்டரி ஆப்ஷன்களுள் ஒன்றில் வாங்கலாம். HTX+ மற்றும் எக்ஸ்-லைன் வேரியண்ட்களை 51.4kWh பேட்டரி உடன் மட்டுமே வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் சிரோஸ் EV எலெக்ட்ரிக் காரில் பெரும்பாலான அம்சங்களை டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கியுள்ளது. இதன் மூலமாக, இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களை குறைந்த விலையில் வழங்க கியா விரும்புவதை அறிய முடிகிறது. இருப்பினும், இந்த வேரியண்ட்களின் விலைகள் எந்த அளவிற்கு நிர்ணயிக்கப்பட உள்ளன என்பது சிரோஸ் EV காரின் அறிமுகத்திற்கு பிறகே தெரியவரும்.


Click it and Unblock the Notifications