கியா நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஜூலை 23ம் தேதி லான்ச்! டீசர் வீடியோவால் எகிறிய எதிர்பார்ப்பு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று கியா சைரோஸ் இவி (Kia Syros EV). இது தற்போது விற்பனையில் உள்ள கியா சைரோஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் வரும் ஜூலை 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வமான டீசர் வீடியோவை (Teaser Video) கியா நிறுவனம் தற்போது முதல் முறையாக வெளியிட்டுள்ளது. கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

2026 Kia Syros

இருப்பினும் சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் இன்ஸ்டர் இவி (Hyundai Inster EV) எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 42 kWh மற்றும் 49 kWh பேட்டரி ஆப்ஷன்கள்தான் (Battery Options), கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 450 கிலோ மீட்டர் மற்றும் 500 கிலோ மீட்டர் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் ஒரு அங்கமாகதான் கியா நிறுவனம் இயங்கி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Tata Nexon EV

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, வி2எல் (Vehicle-to-Load - V2L) மற்றும் வி2வி (Vehicle-to-Vehicle - V2V) தொழில்நுட்பங்கள் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் தலா 12.3 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளையும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் பனரோமிக் சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் கியா சைரோஸ் இவி கொண்டிருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் போட்டியாக இருக்கும்.

அத்துடன் மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13-14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சைரோஸ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் 8,41,900 ரூபாயாக இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் விலை அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மீது கியா நிறுவனம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் வெற்றி பெற வேண்டும் என்றால், கியா நிறுவனம் விலையை சரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Wednesday, July 8, 2026, 13:07 [IST]
English summary
Kia syros ev first teaser video out before july 23 launch
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out