கொரியாக்காரன் நேரம் பாத்து ஆட்டத்த ஆரம்பிச்சுட்டான்... டாடா, மஹிந்திரா பொழப்புல மண்ணை அள்ளி போட போறாங்க...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கியா சைரோஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கியிருந்தாலும் கூட, தற்போது கியா சைரோஸ் காரின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை.

வி3 கார்ஸ் தளம் வெளியிட்டுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், கடந்த 6 மாதங்களில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் வெறும் 605 கியா சைரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் வெறும் 59 கியா சைரோஸ் கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

Kia Syros Side Design

விற்பனை மிக சரிவடைந்து வரும் சூழலில், கியா நிறுவனம் சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. கியா சைரோஸ் இவி (Kia Syros EV) எலெக்ட்ரிக் காரை (Electric Car) இந்திய சாலைகளில் சோதனை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளன.

இந்த சூழலில், கியா நிறுவனம் சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் வரும் ஜூலை மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (Most Affordable Electric Car) என்ற பெருமையை சைரோஸ் இவி பெறவுள்ளது.

Kia Syros

இதன் காரணமாக கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரும் ஜூலை மாதம் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின், நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை 42 kWh மற்றும் 49 kWh பேட்டரி ஆப்ஷன்களாக இருக்கலாம். இதன் அதிகபட்ச டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 450 - 500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளை (Features) எல்லாம் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 13 அல்லது 14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) விலை ஆகும்.

இந்த விலையில் வந்தால், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்திய சந்தையில் இதுதான் கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கும். கியா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

இதில், கியா இவி9 (Kia EV9) எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 1.30 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 65.97 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.99 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் தயாரிப்பான சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் வருகை, இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

இந்திய சந்தையில் கியா சைரோஸ் ஐசி இன்ஜின் காரின் விற்பனை சரிந்துள்ள நேரத்தில், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது. இதன் வருகைக்கு பின்னர், கியா சைரோஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா சைரோஸ் காரின் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களும், டிசைனில் ஒரு சில மாற்றங்களை தவிர, கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, April 13, 2026, 13:24 [IST]
English summary
Kia syros ev india unveil in july expected price driving range safety features
மேலும்... #kia motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+