இந்தியாவிலேயே விலை குறைவான கியா எலெக்ட்ரிக் கார்! வரும் 23ம் தேதி அறிமுகம்! டாடா, மஹிந்திரா, மாருதிக்கு செக்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் இவி (Kia Syros EV). இது கியா சைரோஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் (Electric) வெர்ஷன் ஆகும். இதன் அறிமுக தேதி (Launch Date) குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி பார்த்தால், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் வரும் ஜூலை 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா சைரோஸ் காரின் ஐசி இன்ஜின் மாடலானது, K1 பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வெர்ஷனின் அடிப்படையில்தான் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 Kia Syros

செயல்திறனை பொறுத்தவரையில் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் 42 kWh மற்றும் 49 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில், 42 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 450 கிலோ மீட்டர் என்ற அளவிலும், 49 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 500 கிலோ மீட்டர் என்ற அளவிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில், DC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் AC ஹோம் சார்ஜிங் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அத்துடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மோட்கள், வி2எல் (Vehicle-to-Load - V2L) மற்றும் வி2வி (Vehicle-to-Vehicle - V2V) தொழில்நுட்பம் போன்ற அம்சங்களையும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Kia Carens Clavis EV

மேலும் பனரோமிக் சன்ரூஃப், பிரீமியம் அப்ஹோல்ஸ்ட்ரி, 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளையும் (Features) கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கலாம்.

அத்துடன் AQI டிஸ்ப்ளே உடன் ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஓடிஏ சாப்ஃட்வேர் அப்டேட்கள், ஹார்மன் கார்டன் பிரீமியம் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இருக்காது என நம்பலாம். கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். இந்த பாதுகாப்பு தொகுப்பில் 16 அல்லது அதற்கும் மேற்பட்ட வசதிகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து இருக்கைகளுக்கும் ரிமைண்டர் உடன் 3 பாயிண்ட் சீட் பெல்ட், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க்கிங் சென்சார்கள், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் கியா சைரோஸ் இவி கொண்டிருக்கலாம்.

மேலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல், எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13-14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. ஒருவேளை பாஸ் (BaaS) திட்டம் வழங்கப்பட்டால், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8-10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும்.

ஆனால் பாஸ் முறையில் ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணம் சுமார் 3 ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் மூலமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான கியா எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை சைரோஸ் இவி பெறவுள்ளது. தற்போதைய நிலையில் இந்த பெருமையை கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) தன்வசம் வைத்துள்ளது.

அத்துடன் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு பிறகு, இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் கியா நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையையும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் பெறவுள்ளது. கியா நிறுவனத்தின் எஞ்சிய 2 எலெக்ட்ரிக் கார்களான கியா இவி 6 (Kia EV 6) மற்றும் கியா இவி 9 (Kia EV 9) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

மாறாக அவை முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக அவற்றின் விலையும் அதிகம். இந்தியாவில் விலை குறைவான கியா எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெறவுள்ள சைரோஸ் இவி-யின் வருகை, டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) மற்றும் மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

Article Published On: Sunday, July 5, 2026, 14:32 [IST]
English summary
Kia syros ev launch date july 23 expected price baas range safety features
மேலும்... #kia motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out