சிங்கிள் சார்ஜில் 500 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் கார்! விலை 8 லட்சம்தான்! டாடா பொழப்பு இனி சிரிப்பா சிரிக்க போகுது

இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் இவி (Kia Syros EV). வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் கூட, தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இதன் விற்பனை சிறப்பாக இல்லை. வி3 கார்ஸ் தள தரவுகளின்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் (ஜனவரி-மே) வெறும் 2,701 கியா சைரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது ஒரு மாதத்திற்கு சராசரியாக வெறும் 540 கியா சைரோஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகி வருகின்றன. எனவே கியா சைரோஸ் 'ஃபெயிலியர்' மாடலாக கருதப்படுகிறது. இருப்பினும் கியா நிறுவனம் நம்பிக்கையை இழக்கவில்லை. கியா சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.

Kia Syros Side Design

ஆம், கியா சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அது எப்போது? என்ற கேள்விக்கு தற்போது நமக்கு பதில் கிடைத்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் அடுத்த மாதம் (ஜூலை) பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அப்போது அதன் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலேயே கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகளும் தொடங்கப்படவுள்ளது. இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Kia Syros

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்திற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கியா சைரோஸ் இவிதான், இந்தியாவில் மிகவும் விலை குறைவான கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் (Most Affordable Kia Electric Car) என்ற பெருமையை பெறவுள்ளது.

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 13 அல்லது 14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பாஸ் (BaaS) முறை வழங்கப்பட்டால், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 8-10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும்.

ஆனால் பாஸ் முறையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு கிலோ மீட்டருக்கு 3 ரூபாயை கட்டணமாக நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இவை அனைத்துமே எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.

செயல்திறனை பொறுத்தவரையில், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 42 kWh மற்றும் 49 kWh பேட்டரி ஆப்ஷன்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 450 கிலோ மீட்டர்கள் மற்றும் 500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS), அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து இருக்கைகளுக்கும் ரிமைண்டர் உடன் 3 பாயிண்ட் சீட் பெல்ட், எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளை (Safety Features) கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

கியா சைரோஸ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 2 தரப்பினருக்குமான பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனையிலும் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்றுள்ளது. இதே போன்ற சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கும் நாம் எதிர்பார்க்கலாம்.

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் மற்ற வசதிகளை பொறுத்தவரை, தலா 12.3 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை எல்லாம் முக்கியமான அம்சங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் ட்யூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) மற்றும் மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார், விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Monday, June 29, 2026, 13:45 [IST]
English summary
Kia syros ev launch in august expected price baas safety features
மேலும்... #kia motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out