கியா சிராஸ் EV இப்படித்தான் இருக்கும்.. இணையத்தில் கசிந்த புகைப்படங்கள் வைரல்!

இந்த ஜூலை மாதம் இரண்டு புதிய கார்களை இந்தியாவில் வெளியிடவுள்ளது கியா. அது குறித்த டீஸர் அறிவிப்புகளை இந்த வாரத் தொடக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஒரு ஹைபிரிட் எஸ்யூவி மற்றும் ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு கார்களை வெளியிடவுள்ளது கியா. இதில் ஹைபிரிட் எஸ்யூவியானது இந்தியாவிற்கு முற்றிலும் புதிய, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சொரென்டோவாக இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த ஹைபிரிட் எஸ்யூவிக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமற்ற முறையில் கியா டீலர்களால் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கியாவின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்து தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. கியா இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் சிராஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வடிவத்தைத் தான் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் புதிய காரின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Kia Syros EV design leaked

பெங்களூருவில் மறைக்கப்படாத வகையில் சிராஸ் EV கார் சாலையில் ஓட்டிச் செல்லப்பட்ட போது ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது. பச்சை நிற நம்பர் பிளேட்டைக் கொண்டு இது சிராஸ் EV தான் என்பதை நாம் உறுதி செய்ய முடிகிறது. டிசைனை வைத்துப் பார்க்கும் போது சிராஸ் எரிபொருள் எஸ்யூவியின் ஜெராக்ஸ் காப்பியாகவே சிராஸ் EV இருக்கிறது. பவர்ட்ரெயினைத் தவிர சிராஸ் மற்றும் சிராஸ் EV-க்கு இடையே எந்த பெரிய வேறுபாடும் இல்லை.

ஆனால் முன்பக்கம் கிரில் பகுதி மட்டும் எலெக்ட்ரிக் கார்களுக்கு இருப்பது போல குளோஸ்டு ஆஃப் ஆக இருக்கிறது. சிராஸ் எரிபொருள் காரிலேயே கிரில் சிறியதாகத் தான் கொடுக்கப்பட்டிருக்கும். சிராஸ் EV-யில் அதுவும் குறைக்கப்பட்டிருக்கிறது. காருக்கான சார்ஜிங் பாயிண்ட், முன்பக்க கதவுக்கு முன்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Kia Syros EV design leaked

இந்த சில மாற்றங்களைத் தவிர சிராஸ் EV-யில் வேறு எந்த டிசைன் மாற்றத்தையும் நாம் பார்க்க முடியவில்லை. குறிப்பாக அலாய் வீல்கள் கூட சிராஸ் எரிபொருள் காரில் இருப்பது போலத் தான் சிராஸ் EV-யிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறம் எந்த டிசைன் மாற்றங்களும் இல்லாத காரணத்தினால், உட்புறமும் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சில வசதிகள் மற்றும் அம்சங்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். மற்றபடி எரிபொருள் சிராஸ் மாடலைப் போலவே தான் சிராஸ் EV-யும் இருக்கும் என்றே தெரிகிறது. காரின் தோற்றம் மட்டும் தான் இணையத்தில் கசிந்துள்ளது. காரில் கொடுக்கப்படும் அம்சங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்தப் புதிய சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் கேரன்ஸ் கிளாவிஸ் EV-யில் இருப்பது போலவே 42 kWh மற்றும் 51.4 kWh பேட்டரி பேக் தேர்வுகளே கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் தேர்வுகளும் கேரன்ஸ் கிளாவிஸ் EV-யில் பயன்படுத்தப்பட்டிருப்பது தான் சிராஸ் EV-யிலும் இருக்கும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

இதில் சிறிய பேட்டரி பேக்கானது 443 கிமீ வரையிலான ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கானது 520 கிமீ வரையிலான ரேஞ்சையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிராஸ் EV, இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV 3XO EV உள்ளிட்ட சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜூலை 23ல் 14 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களே அதிகளவில் இந்தியாவில் விற்பனையில் இருப்பதால், பெரிய அளவில் போட்டி இல்லாத சப்-காம்பேக்ட் பிரிவில் சிராஸ் EV நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Saturday, July 11, 2026, 16:34 [IST]
English summary
Kia syros ev suv design leaked now launch planned on july 23
மேலும்... #kia motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out