சிங்கிள் சார்ஜில் 526 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் கார்! விலை 8 லட்சம்தானா! டாடாவை குழி தோண்டி புதைக்க போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா சைரோஸ் இவி (Kia Syros EV) எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ட்யூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்காக 30 இன்ச் ட்ரினிட்டி பனரோமிக் டிஸ்ப்ளே பேனல் போன்ற வசதிகளையும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது. இந்த வரிசையில் 16 வசதிகள் அடங்கிய லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது.

Kia Syros EV

செயல்திறனை பொறுத்தவரையில் 51.4 kWh மற்றும் 42 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்களை (Battery Options) கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 526 கிலோ மீட்டர் மற்றும் 443 கிலோ மீட்டராக உள்ளன. கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் பேட்டரி ஆப்ஷன்களின் திறனும் கிட்டத்தட்ட டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கணித்தபடிதான் இருக்கிறது. மேலும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் பெரிய பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் எனவும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் தொடர்ந்து கூறி வந்தது. அவை அனைத்தும் அப்படியே நடந்துள்ளன.

Tata Nexon EV

சரி, கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? 100 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் பேட்டரிகளை வெறும் 39 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் நேரடி போட்டியாக இருக்கும். போட்டி மாடல்களின் டிரைவிங் ரேஞ்ஜை விட கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அதாவது டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் 45 kWh மற்றும் 30 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் முறையே 489 கிலோ மீட்டர் மற்றும் 275 கிலோ மீட்டராக மட்டுமே உள்ளது. மறுபக்கம் எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரிலும் 38 kWh மற்றும் 52.9 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றின் டிரைவிங் ரேஞ்ஜூம் முறையே வெறும் 332 கிலோ மீட்டர் மற்றும் 449 கிலோ மீட்டராக மட்டுமே உள்ளது. எனவே டிரைவிங் ரேஞ்ச் விஷயத்தில் டாடா நெக்ஸான் இவி மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விட கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார்தான் முன்னணியில் உள்ளது. இதன் காரணமாக கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருந்து வருகிறது. ஆனால் அதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அவ்வளவு சிறப்பான வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே கியா நிறுவனம் சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அதை மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே டாடா நெக்ஸான் இவி மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார்களை விட சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் வழங்கும் பேட்டரியை கியா நிறுவனம் சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கியுள்ளது. ஆனால் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. கியா நிறுவனம் விலையை மட்டும் சரியாக நிர்ணயம் செய்து விட்டால், சைரோஸ் இவி பிரம்மாண்டமான வெற்றியை பெறலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12.49 லட்ச ரூபாயாக உள்ளது. இதில், பாஸ் (BaaS) ஆப்ஷன் இல்லை. மறுபக்கம் எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 14.70 லட்ச ரூபாயாக இருக்கிறது. எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில் பாஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

பாஸ் முறையில் வாங்கினால் இதன் ஆரம்ப விலை வெறும் 9.99 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் பாஸ் முறையை தேர்வு செய்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 3.99 ரூபாயை நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வரிசையில் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 13-14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரை போலவே கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரிலும் பாஸ் ஆப்ஷன் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பாஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டால் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8-10 லட்ச ரூபாய் என்ற அளவில் குறைந்து விடலாம். அதேபோல் ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கான 3-4 ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Thursday, July 16, 2026, 14:07 [IST]
English summary
Kia syros ev tata nexon ev mg windsor ev battery driving range comparison
மேலும்... #kia motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out