100% எத்தனாலில் இயங்கும் கியா சைரோஸ் காரின் கான்செப்ட் இந்தியாவில் அறிமுகம்!!

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், வாகனங்களின் புகையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க சலுகைகளை வழங்குவதுடன், எத்தனால் கலந்த பெட்ரோல் வினியோகத்தையும் நடைமுறைப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு மாற்று எரிபொருள் பக்கம் தீவிர கவனம் செலுத்துவதை தொடர்ந்து அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்வதற்கு வாகன நிறுவனங்கள் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளன. அந்த வகையில், மாருதியை தொடர்ந்து கியா மோட்டார் நிறுவனமும் 100 சதவீதம் எத்தனால் மற்றும் எத்தனால் கலப்பு பெட்ரோலிலும் இயங்கும் புதிய சைரோஸ் காரின் கான்செப்ட்டை இன்று வெளியிட்டுள்ளது.

Kia SYROS FFV

எத்தனாலிலும் இயங்கும்

இந்த புதிய கான்செப்ட் மாடலின் முக்கிய சிறப்பாக பெட்ரோல் மட்டுமின்றி வெவ்வேறு அளவுகளில் எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் வெறும் 100 சதவீத எத்தனாலிலும் இயங்கும். கியா வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த தொழில்நுட்பம் E0 முதல் E100 வரையிலான எரிபொருள் கலவைகளில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Also Read

டர்போ பெட்ரோல் எஞ்சின்

புதிய சைரோஸ் Flex Fuel Concept மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இந்த கான்செப்ட் மாடலின் அதிகபட்ச பவர் மற்றும் டார்க் குறித்த தகவல்கள் இப்போது வெளியிடப்படவில்லை.

எத்தனால் அளவு மாறுபடுவதற்கு ஏற்ப எஞ்சின் கையாளும் வகையில், வழக்கமான சைரோஸ் பெட்ரோல் மாடலில் இருந்து சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இசியூ, டிசியூ மற்றும் எரிபொருள் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எரிபொருளில் உள்ள எத்தனால் அளவுக்கு ஏற்ப எஞ்சின் செயல்பாடு மற்றும் எரிபொருள் வினியோகத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Also Read

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

இந்த புதிய சைரோஸ் கான்செப்ட் மாடலில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படும். தற்போதைய சைரோஸ் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் வழங்கப்படும் நிலையில், புதிய ப்ளெக்ஸி ஃப்யூவல் மாடலில் வேறுபட்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது. ஆனால், இன்னும் உறுதியானத் தகவல் இல்லை.

தோற்றத்தில் மாற்றம் இல்லை

இந்த புதிய மாடலின் தோற்றத்தில் பெரிய டிசைன் மாறுதல்கள் எதுவும் இருக்காது. சைரோஸ் காருக்கு தனித்துவத்தை வழங்கும் பாக்ஸி டிசைன், உயரமான பாடி அமைப்பு, Ice-Cube எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெறும். மேலும், இரட்டை வண்ண 17 அங்குல அலாய் சக்கரங்கள், ரூஃப் ரெியில்கள், இரட்டை வண்ண பம்பர் அமைப்பு போன்றவை இந்த கான்செப்ட்டில் பார்க்க முடிகிறது.

தயாரிப்புக்கு உகந்த மாடல் எப்போது?

உட்புறத்தை பொறுத்தவரையிலும், வழக்கமான சைரோஸில் காணப்படும் பல அம்சங்கள் இங்கு தொடர்கின்றன. இந்த E100 இணக்கத்தன்மை கொண்ட மாடல் தற்போது கான்செப்ட் நிலையிலேயே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் தயாரிப்பு நிலை மாடல் எப்போது சந்தைக்கு கொண்டு வரப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை இல்லை.

Article Published On: Friday, September 4, 2026, 16:38 [IST]
English summary
Kia syros flex fuel concept e0 e100 ethanol engine revealed india
மேலும்... #new launches #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out