கருப்பு சூர்யா மாதிரி கம்பேக் கொடுத்த கார்... இனிமேல்தான் ஆட்டமே இருக்கு... டாடா, மஹிந்திராவிற்கு செக்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இந்திய சந்தையில் இதன் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. எனவே சைரோஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலை கியா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
2026 கியா சைரோஸ் காரின் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளன. இந்த சூழலில் கியா சைரோஸ் காரின் விற்பனை தற்போது வெகுவாக உயர்ந்துள்ளது. நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 59 கியா சைரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின் வந்த ஏப்ரல் மாதம் 554 கியா சைரோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாதத்தில் 495 கியா சைரோஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கியா சைரோஸ் கார் விற்பனையில் 838.98 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் வந்துள்ளதால், இனி வரும் மாதங்களில், இந்திய சந்தையில் கியா சைரோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் கியா சைரோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கு மேலும் ஒரு முக்கியமான காரணமும் உள்ளது. அது எலெக்ட்ரிக் வெர்ஷனின் வருகை ஆகும். ஆம், கியா நிறுவனம் சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 42 kWh மற்றும் 49 kWh பேட்டரிகள் ஆகும். இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 300 கிலோ மீட்டர்கள் மற்றும் 350 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரானது, V2L மற்றும் V2V வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அடாஸ் (ADAS) பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும் கியா சைரோஸ் இவி கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் ஆரம்ப விலை (Price) அனேகமாக வெறும் 13 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெறவுள்ளது. இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு, கியா சைரோஸ் இவி போட்டியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா நிறுவனத்தின் சொனெட், செல்டோஸ், கேரன்ஸ் க்ளாவிஸ் போன்ற கார்கள் எல்லாம் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சைரோஸ் மட்டும் தத்தளித்து கொண்டுள்ளது. 2026 மாடல் வருகை மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் போன்றவை எல்லாம் கியா சைரோஸ் காரின் விற்பனை எண்ணிக்கையை மீட்டு எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications