20 வயதில் F1 உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த கிமி அன்டோனெல்லி!!

ஃபார்முலா 1 (F1) கார் பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டம் வெல்வது ஒவ்வொரு வீரரின் கனவாக உள்ளது. ஆனால், மிக இளம் வயதிலேயே அந்த உச்சத்தைத் தொடுவது என்பது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படும். அந்த வகையில், இத்தாலியைச் சேர்ந்த கிமி அன்டோனெல்லி தனது அபாரமான திறமையால் 20 வயதில் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

மெர்சிடிஸ் அணியின் இளம் நட்சத்திர கார் பந்தய வீரரான அன்டோனெல்லி, நடப்பு 2026 ஆண்டு சீசன் முழுவதும் நிலையான நகர்வுகள் மற்றும் வெற்றிகளுடன் தனது சாம்பியன் பட்டத்தை நோக்கி முன்னேறினார். இந்த நிலையில் நேற்று மெக்சிகோ சிட்டி கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் F1 உலகின் மிக இளம் சாம்பியன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Antonelli F1 Champion

வெட்டலின் சாதனை முறியடிப்பு

ஃபார்முலா 1 கார் பந்தய வரலாற்றில் இதற்கு முன்பு மிக இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனை ஜெர்மனியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் படைத்திருந்தார். கடந்த 2010ம் ஆண்டு அவர் ரெட் புல் அணிக்காக 23 வயது 134 நாட்களில் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

தற்போது அன்டோனெல்லி 20 வயது 68 நாட்களில் உலக சாம்பியன் பட்டத்துடன் வெட்டலின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவ்வளவு இளம் வயதில் F1 உலகின் உச்சத்தைத் தொடுவது அவரது திறமைக்குக் கிடைத்த பரிசாக இருக்கிறது.

Also Read

இளம் வயதில் உலக சாம்பியனான மற்ற வீரர்கள்

ஃபார்முலா 1 கார் பந்தய வரலாற்றில் இளம் வயதிலேயே உலக சாம்பியன் பட்டம் வென்றவர்களில் லூயிஸ் ஹாமில்டனும் முக்கியமானவர். 2008ஆம் ஆண்டு மெக்லாரன் அணிக்காக 23 வயது 300 நாட்களில் பட்டம் வென்றார். வெட்டல் மற்றும் ஹாமில்டன் ஆகியோரின் சாதனைகளை தற்போது அன்டோனெல்லி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ அலோன்சோ 2005ம் ஆண்டு ரெனோ அணிக்காக 24 வயது 58 நாட்களில் உலக சாம்பியனானார். அதேபோல், நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2021ம் ஆண்டு தனது 24 வயது 73 நாட்களில் ரெட் புல் அணிக்காக முதல் பட்டத்தை வென்றார். இந்த முன்னணி வீரர்களின் சாதனைகளையும் அன்டோனெல்லி முறியடித்துள்ளார்.

Antonelli F1 Champion

அன்டோனெல்லியின் மற்ற சாதனைகள்

உலக சாம்பியன்ஷிப் பட்டம் மட்டுமின்றி, அன்டோனெல்லி தனது இளம் வயதிலேயே பல சாதனைகளைப் படைத்துள்ளார். 19 வயதில் சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் போல் பொசிஷன் பெற்றதன் மூலம், F1 வரலாற்றில் மிக இளம் வயதில் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த வீரர்களில் ஒருவரானார்.

மேலும், 21ஆம் நூற்றாண்டில் பிறந்த முதல் F1 உலக சாம்பியன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2006ஆம் ஆண்டு பிறந்த இவர், F1 போட்டிகளில் அறிமுகமான இரண்டாவது சீசனிலேயே உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இது அவரது அபாரமான திறமைக்கும் மெர்சிடிஸ் அணியின் வலுவான செயல்பாட்டிற்கும் சான்றாக அமைந்துள்ளது.

Also Read

73 ஆண்டுகளுக்குப் பிறகு...

ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் பட்டம் வென்று 73 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடைசியாக 1953ம் ஆண்டு ஆல்பர்ட்டோ அஸ்காரி உலக சாம்பியன் பட்டத்தை பெற்றார். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அன்டோனெல்லி இந்த நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதன் மூலம் F1 வரலாற்றில் உலக சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது இத்தாலிய வீரர் என்ற பெருமையையும் அன்டோனெல்லி பெற்றுள்ளார். இதற்கு முன்பு கியூசெப்பே ஃபரினா 1950ஆம் ஆண்டிலும், ஆல்பர்ட்டோ அஸ்காரி 1952 மற்றும் 1953ஆம் ஆண்டுகளிலும் இத்தாலிக்காக உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர்.

வெறும் 20 வயதில் F1 உலக சாம்பியனாகி, பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்துள்ள கிமி அன்டோனெல்லியின் வெற்றி மோட்டார் பந்தய உலகில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இளம் வயதிலேயே தனது திறமையை நிரூபித்துள்ள இவர், எதிர்காலத்தில் மேலும் பல உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று F1 வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Article Published On: Monday, November 2, 2026, 10:41 [IST]
English summary
Kimi antonelli youngest f1 world champion 2026
மேலும்... #motorsports #formula 1
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out