உலகிலேயே பவர்ஃபுல்லான எஸ்யூவியாக 'உரூஸ் SE பர்ஃபார்மன்டே'வை வெளியிட்டுள்ளது லம்போர்கினி

உலகளவில் சூப்பர் கார்களுக்கு பெயர் போன பிராண்டு லம்போர்கினி. இந்த நிறுவனத்தின் மிகவும் பிராக்டிகலான காராக உரூஸ் (Urus) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எஸ்யூவி வகையைச் சேர்ந்த ஒரு காராகும். வழக்கமான லம்போர்கினி கார்களே பெர்ஃபாமன்ஸில் பட்டையைக் கிளப்பும், இந்நிலையில் இன்னும் கூடுதல் பெர்ஃபாமன்ஸைக் கொடுத்தும் வகையில் உரூஸ் 'SE பர்ஃபார்மென்டே' (Urus SE Performante) என்ற சிறப்பு காரை தற்போது சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது லம்போர்கினி.

2024ம் ஆண்டு தான் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த உரூஸ் பர்ஃபார்மன்டே காரின் விற்பனையை நிறுத்தியது அந்நிறுவனம். தொடர்ந்து தற்போது பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட உரூஸ் SE காரின் பர்ஃபார்மன்டே வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. உலகளவில் உயர்தர பெர்ஃபாமன்ஸைக் கொண்ட, டாப் பெர்ஃபாமன்ஸைக் கொண்ட கார் என்றால் அது இந்த லம்போர்கினி உரூஸ் SE பர்ஃபார்மன்டே தான்.

Lamborghini Urus SE Performante

உரூஸ் SE பர்ஃபார்மன்டே பவர்ட்ரெயின்:

இந்த சூப்பர் எஸ்யூவியின் சிறப்பம்சமே இதன் பவர்ட்ரெயின் தான். இந்தக் காரில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜினுடன், சிறிய எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரை இயக்குவதற்காக 25.9 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் ஒன்றும் இந்த உரூஸ் SE பர்ஃபார்மன்டே காரில் உள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த ஹைபிரிட் பவர்ட்ரெயினானது 812 hp பவர் மற்றும் 1000 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இது ஸ்டாண்டர்டான உரூஸ் SE காரை விட 12 hp வரை கூடுதல் பவர் மற்றும் 50 Nm வரை கூடுதல் டார்க்காகும். பெட்ரோல் இன்ஜின் மட்டுமே கொண்ட ஹைபிரிட் அல்லாத உரூஸ் பர்ஃபார்மன்டேவுடன் ஒப்பிடும் 146 hp பவர் மற்றும் 150 Nm டார்க் வரை கூடுதலாகும்.

Lamborghini Urus SE Performante

இந்தப் புதிய டாப் எண்டு ஹைபிரிட் பவர்ட்ரெயினின் உதவியுடன் மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 3.3 நொடிகளிலும், மணிக்கு 200 கிமீ வேகத்தை 10.9 நொடிகளிலும் எட்டும் திறனைக் கொண்டுள்ளது லம்போர்கினி உரூஸ் SE பர்ஃபார்மன்டே. ஆனால் அதிகபட்ச வேகம் ஸ்டாண்டர்டு உரூஸ் SE-யின் அதே மணிக்கு 312 கிமீ தான். இந்த அதிகபட்ச வேகம் எலெக்ட்ரானிக்கலாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற மாற்றங்கள் மற்றும் விலை:

இந்த பவர்ட்ரெயின் அப்கிரேடு தான் பர்ஃபார்மன்டே வெர்ஷனின் முக்கியப் புள்ளி. இதனைக் கடந்து உட்புறமும் வெளிப்புறமும் ஸ்டாண்ர்டு உரூஸ் SE காரில் இருந்து தனித்துத் தெரியும் வகையில் பல்வேறு வகையிலும் பர்ஃபார்மன்டே வெர்ஷனை லம்போர்கினி மேம்படுத்தியிருக்கிறது. இந்த எஸ்யூவியை என்ன விலையில் விற்பனை செய்யவிருக்கிறது என்பதை லம்போர்கினி இன்னும் அறிவிக்கவில்லை.

உரூஸ் பர்ஃபார்மன்டே கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது இந்த உரூஸ் SE பர்ஃபார்மன்டே எஸ்யூவியும் இந்தியாவில் வெளியிடப்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் தற்போது ஸ்டாண்டர்டான உரூஸ் SE எஸ்யூவியை மட்டும் இந்தியாவில் லம்போர்கினி விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்டாண்டர்டு கார் 4.57 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. புதிய கார் இன்னும் சற்று கூடுதலான விலையில் வெளியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் உரூஸ் காரின் வெளியீடு லம்போர்கினிக்கு ஒரு சிறிய ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். லம்போர்கினி ஸ்டைல் கார்கள் மிகவும் பிராக்டிகலானவை கிடையாது, அனைத்து சாலைகளிலும் அதனை பயன்படுத்த முடியாது. எனவே கொஞ்சம் கூடுதல் பிராக்டிகல்னஸைக் கொண்டிருக்கும் உரூஸ் வாடிக்கையாளர்களிடம் உடனடியாக டிக்கடித்துவிட்டது.

வழக்கத்தை விட இருமடங்கு வாடிக்கையாளர்கள் திரண்டு வந்து இந்தக் காரை வாங்கி வருகிறார்கள். இந்தியாவிலும் லம்போர்கினியின் விற்பனையில் 50 சதவீதம் உரூஸ் கார் மூலமாகவே வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் முன்பை விட நல்ல விற்பனையைப் பதிவு செய்து வருகிறது லம்போர்கினி. அதாவது 100-க்கும் மேலான கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டு இந்தியாவில் 111 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, July 2, 2026, 8:57 [IST]
English summary
Lamborghini urus se performante the most powerful suv in the world debuted
மேலும்... #lamborghini #suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out