35 கிமீ மைலஜூடன் அடிமாட்டு விலையில் விற்பனை செய்யப்படும் CNG கார்கள் இவை தான்

பெட்ரோல் விலையை 3 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. இது இத்தோடு நிற்கப் போவதில்லை. இன்னும் உயர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. இப்படி பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து ஏற்றி வருவதாக் தான் மக்கள் CNG கார்களுக்கு மாறி வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி பெட்ரோலுக்கு அடுத்தபடியாக CNG கார்களையே இந்தியாவில் அதிக மக்கள் வாங்கி வருகிறார்கள்.

பெட்ரோலுடன் ஒப்பிடும் போது CNG விலை குறைவு தான். ஆனால் பெட்ரோலை விட அதிக மைலேஜ் கொடுக்கும். இந்தக் காரணங்கள் தான் பெட்ரோலுக்கு அடுத்தபடியாக CNG கார்களை தேர்வு செய்ய மக்களை உந்தித் தள்ளியிருக்கிறது. இப்போது பலரும் குறைவான விலையில் கிடைக்கும் CNG கார்கள் குறித்து தேடத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு. இந்தியாவில் இப்போது கம்மியான விலையில் விற்பனை செய்யப்பட்டும் வரும் CNG கார்களைக் குறித்துப் பார்க்கலாம்.

Maruti S-Presso

அடிமாட்டு விலையில் ஒரு CNG கார் வாங்க வேண்டும் என்றால் உங்கள் தேர்வு மாருதி எஸ்-பிரஸ்ஸோவாகத் தான் இருக்க வேண்டும். இது தான் தற்போதைய நிலையில் இந்தியாவின் விலை குறைவான CNG கார். 4.61 லட்சம் ரூபாய் முதல் 5.11 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் எஸ்-பிரஸ்ஸோவின் CNG காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மாருதி சுஸூகி.

இந்தக் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் CNG எரிபொருளிலும் இயங்கும். CNG-யில் இயங்கும் போது பெட்ரோலில் இயங்கும் போது கொடுக்கபதை விட சற்று குறைவாக 57 hp பவர் மற்றும் 82 Nm டார்க்கையே இந்த இன்ஜின் உற்பத்தி செய்யும். CNG எரிபொருளில் இயங்கும் போது கிலோவுக்கு 33 கிமீ மைலேஜ் கொடுக்கும் என மாருதி கூறுகிறது. இந்த CNG காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் இல்லை.

Maruti Alto K10

இதற்கு அடுத்த இடத்தில் மாருதியின் மற்றொரு விலை குறைவான சிறிய ரக CNG காரான ஆல்டோ K10 இருக்கிறது. இந்த ஹேட்ச்பேக் மாடலின் CNG வெர்ஷனை 4.81 லட்சம் முதல் 5.31 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மாருதி சுஸூகி. எஸ்-பிரஸ்ஸோவில் இருக்கும் அதே CNG பவர்ட்ரெயின் தான் ஆல்டோவிலும் உள்ளது. மைலேஜ் சற்று கூடுதலாக கிலோவுக்கு 35 கிமீ ஆக இருக்கிறது.

மூன்றாவது இடத்தில் டாடா டியாகோ உள்ளது. இந்த தொடக்கநிலை ஹேட்ச்பேக்கின் CNG பவர்ட்ரெயின் கொண்ட வேரியன்ட்களை 5.53 லட்சம் ரூபாய் முதல் 8.19 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கூடிய CNG கார் ஒன்றை குறைவான விலையில் வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கான தேர்வு இந்த டாடா டியாகோ CNG தான்.

இந்தக் காரில் நாம் மேலே பார்த்த CNG கார்களில் கொடுக்கப்பட்டிருந்ததை விட சற்று பவர்ஃபுல்லான இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினானது CNG எரிபொருளில் இயங்கும் போது 73 hp பவர் மற்றும் 95 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளை அந்நிறுவனம் கொடுத்திருக்கிறது.

அடுத்த இரண்டு இடங்களில் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி செலரியோ ஆகிய கார்கள் உள்ளன. வேகன் ஆர் காரின் CNG வெர்ஷனை 5.88 லட்சம் முதல் 6.41 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் மாருதி விற்பனை செய்து வருகிறது. அதேபோல் செலரியோ ஹேட்ச்பேக் காரின் CNG வெர்ஷனை 5.97 லட்சம் ரூபாய் என்ற விலையில் மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே கொடுக்கப்பட்டிருக்கிறது. CNG எரிபொருளில் இயங்கும் போது இந்த இன்ஜினானது 59 hp பவர் மற்றும் 78 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் இரண்டு கார்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை. மைலேஜ் கிலோவுக்கு 35 கிமீ என்ற அளவில் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதற்கு மேலும் 15 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் 25-க்கும் மேற்பட்ட CNG கார்கள் விற்பனையில் இருக்கின்றன. ஆனால் குறைவான விலையில் வாங்க வேண்டும் என்றால் மேலே குறிப்பிட்டிருப்பவை தான் சிறந்த சாய்ஸ். இங்கே மீண்டும் ஒரு முறை ஐந்து மாடல்களையும் குறிப்பிடுகிறோம். மாருதி எஸ்-பிரஸ்ஸோ, மாருதி ஆல்டோ K10, டாடா டியாகோ, மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி செலரியோ.

குறைவான விலையில் தான் CNG கார் வேண்டும் என்பவர்ல ஆல்டோ K10-ஐ தேர்வு செய்யலாம். இந்தக் காரில் இடவசதி குறைவாக இருக்கும் என்பவர்கள் வேகன் ஆரை தேர்வு செய்யலாம். பல்வேறு வகையிலும் பிராக்டிகலான காராக இந்த வேகன் ஆர் இருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி தேவைப்படுபவர்கள், குறிப்பாக நகரங்களில் இருப்பவர்கள் டியாகவோ தேர்வு செய்யலாம். ஆனால் மாருதியின் CNG கார்களை விட சற்று குறைவாகவே மைலேஜ் கொடுக்கும்.

Article Published On: Friday, May 15, 2026, 14:59 [IST]
English summary
Low price cng cars in india 4 maruti cars in the list check all the details here for more informatio
மேலும்... #cng car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+