உலக நாடுகளின் சாலைகளை ஆள தொடங்கிய மேட் இன் சென்னை கார்... இந்தியால டாடாவுக்கு டஃப் குடுக்குது...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று சிட்ரோன் (Citroen). இது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஆகும். நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஸ்டெல்லன்டிஸ் (Stellantis) நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே சிட்ரோன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதாவது ஸ்டெல்லன்டிஸ்தான் சிட்ரோனின் தாய் நிறுவனம் ஆகும்.
இந்த சூழலில் இந்தியாவில் இருந்து சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) காரின் ஏற்றுமதியை ஸ்டெல்லன்டிஸ் தொடங்கியுள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கூபே எஸ்யூவி (Coupe SUV) ரக கார்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் டாடா கர்வ் (Tata Curvv) போன்ற கார்களுடன், சிட்ரோன் பசால்ட் போட்டியிட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து தென் ஆப்ரிக்க சந்தைக்கு சந்தைக்கு சிட்ரோன் பசால்ட் காரின் ஏற்றுமதி பணிகள் தொடங்கியுள்ளன. இது சென்னையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் சிட்ரோன் பசால்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் 8.55 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இருப்பினும் பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில் இது 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சிட்ரோன் பசால்ட் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது.

இதன் மைலேஜ் 18 கிலோ மீட்டர் ஆகும். அதே நேரத்தில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடலின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 19.5 கிலோ மீட்டராக உள்ளது.
அதே நேரத்தில் இதன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 18.7 கிலோ மீட்டராக இருக்கிறது. இவை அனைத்துமே சிட்ரோன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்டெல்லன்டிஸ் நிறுவனத்தின் முக்கியமான ஏற்றுமதி மையமாக இந்தியா மாறி வருகிறது. ஸ்டெல்லன்டிஸ் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்தியாவை தங்களது முக்கியமான ஏற்றுமதி மையமாகி மாற்றியுள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் உலகின் பல்வேறு நாடுகளின் சாலைகளிலும் ஆட்சி செய்து கொண்டிருப்பது பெருமைக்குரிய விஷயம்தான்.
தற்போது தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ள சிட்ரோன் பசால்ட் கார், இந்தியாவின் முதல் எஸ்யூவி கூபே ரக கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது இந்திய சந்தையில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சிட்ரோன் பசால்ட் காரில், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications