ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய எஸ்யூவி வெளியானது

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யவிருக்கும் புதிய கண்ட்ரிமேன் C (Countryman C) எஸ்யூவியை தற்போது வெளியிட்டுள்ளது மினி (Mini). இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மூன்றாம் தலைமுறை கண்ட்ரிமேன் லைன்-அப்பில் இணைகிறது இந்தக் கார். ஏற்கனவே கண்ட்ரிமேன் JCW ALL4 மாடலை முழுவதுமாக இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மினி.

மினி கண்ட்ரிமேன் C எஸ்யூவியானது இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படவிருப்பதால், முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கண்ட்ரிமேன் JCW ALL4 மாடலை விட 18.65 லட்சம் ரூபாய் குறைவாக 47.50 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது. சென்னையில் உள்ள BMW தொழிற்சாலையிலேயே இந்தப் புதிய கண்ட்ரிமேன் C எஸ்யூவி அசெம்பிள் செய்யப்படவுள்ளது.

Mini Countryman C

4,447 மிமீ நீளம், 1,843 மிமீ அகலம், 1,661 மிமீ உயரம் மற்றும் 2,692 மிமீ வீல்பேஸ் ஆகிய அளவுகளைக் கொண்டிருக்கிறது கண்ட்ரிமேன் C. கிரௌண்டு கிளியரன்ஸானது 190 மிமீ ஆக உள்ளது. இந்த அளவுகளுடன் ஹூண்டாய் கிரெட்டாவிற்கு இணையான அல்லது அதனை விட 'கொஞ்சம்' பெரிய எஸ்யூவியாக இந்த கண்ட்ரிமேன் C-யைக் கூறலாம். அளவில் மட்டும்.

இந்த ப்ரீமியம் எஸ்யூவியில் சற்று பவர்ஃபுல்லான 1.5 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது மினி. இந்த இன்ஜினானது 156 hp பவர் மற்றும் 240 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் பவர் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக காரின் முன்பக்க வீல்களுக்கு அனுப்பப்படுகிறது.

Mini Countryman C

இந்த பவர்ட்ரெயின் உதவியுடன் மணிக்கு 100 கிமீ வேகத்தை 9 நொடிகளில் எட்டும் இந்த கண்ட்ரிமேன் C எஸ்யூவி, அதிகபட்சமாக மணிக்கு 212 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டுள்ளது. 60 லிட்டர் எரிபொருள் டேங்கைக் கொண்டிருக்கும் இந்த ப்ரீமியம் எஸ்யூவி காரின் மைலேஜ் லிட்டருக்கு 15.92 கிமீ எனக் குறிப்பிட்டுள்ளது மினி. கண்ட்ரிமேன் JCW ALL4 மாடலானது இதனை விட அதிகமாக 300 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இன்ஜினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல காரின் உட்புறம் மிகவும் மினிமலிஸ்டிக்கான அதே நேரம் ப்ரீமியமான கேபின் கொடுக்கப்பட்டிருக்கிறது. டூயல் டோன் டேஷ்போர்டில், வட்ட வடிவில் 9.4 இன்ச் OLED டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் திரை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தனியாக ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இல்லை. காரின் பெரும்பான்மையான அம்சங்களை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாகவே இயக்க முடிகிற வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, ஸ்டீயரிங் மவுன்ட்ட கண்ட்ரோல்கள், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா, பனோரமிக் கிளாஸ் ரூஃப், பவர்டு முன்பக்க சீட்கள், வயர்லெஸ் போன் சார்ஜிங், பார்க்கிங் அசிஸ்ட், மஸாஜிங் வசதியுடன் கூடிய டிரைவர் சீட் ஆகிய அம்சங்களையும் இந்த கண்ட்ரிமேன் C எஸ்யூவி கொண்டுள்ளது.

5 சீட்டர் காரான இந்த கண்ட்ரிமேன் C எஸ்யூவியில், ரியர் சீட்டை 130 மிமீ வரை நகர்த்திக் கொள்ளவும், 25 டிகிரி வரை சாய்த்துக் கொள்ளவும் முடியும். 505 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது இந்த ப்ரீமியம் எஸ்யூவி. கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆம்பியன்ட் லைட்டிங், MINI டிஜிட்டல் கீ பிளஸ், எட்டு டிரைவ் மோடுகள் ஆகிய தனித்துவமான வசதிகளையும் இந்தக் கார் கொண்டுள்ளது. யூரோ NCAP பாதுகாப்பு தரச்சோதனையில் இந்த எஸ்யூவி 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்க்க க்யூட்டாகவும், நல்ல இடவதியுடனும் இருக்கும் மினி காரை வாங்க விரும்புபவர்களுக்கு இதுவொரு சிறப்பான வாய்ப்பு. ஒரு ஹேட்ச்பேக்காக இல்லாமல், மினி எஸ்யூவியையே இப்போது 50 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் நாம் வாங்க முடியும். மேலும் போதுமான பவர் மற்றும் பெர்ஃபாமன்ஸையும் இந்தக் கார் கொண்டிருக்கிறது. இதற்கு மேல் வேறென்ன வேண்டும். உடனே புக் பண்ண கிளம்புங்க.

Article Published On: Wednesday, June 17, 2026, 16:23 [IST]
English summary
Made in india mini countryman c suv launched in india at lower price
மேலும்... #mini #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out