ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி கார்களின் அசுர வேட்டை! ஒரே மாதத்தில் 1 லட்சம் பேரது நம்பிக்கையை பெற்ற மஹிந்திரா!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் நடந்து முடிந்த கடந்த 2026 ஜூன் மாதத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது முந்தைய 2025ஆம் ஆண்டின் இதே ஜூன் மாதத்தை காட்டிலும் 37% அதிகமாகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திராவில் இருந்து 3-வீலர்கள், கார்கள் மட்டுமின்றி கனரக கமர்ஷியல் வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்கும் மஹிந்திராவில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

mahindra amp amp mahindra vehicles sales

சரியாக சொல்ல வேண்டுமென்றால், 1 லட்சத்து 6 ஆயிரத்து 207 வாகனங்கள் மஹிந்திராவில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2025 ஜூன் மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 37% அதிகமாகும். இந்த எண்ணிக்கையில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா வாகனங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையும் அடங்குகின்றன.

கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 393 யூனிட்கள் ஆகும். ஆனால், கடந்த 2025 ஜூன் மாதத்தில் 47 ஆயிரத்து 306 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 28% அதிகரித்துள்ளது.

mahindra amp amp mahindra vehicles sales

கடந்த மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 61 ஆயிரத்து 504 யூனிட்கள் ஆகும். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ஜூன் வரையிலான மூன்று மாத காலக்கட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 745 மஹிந்திரா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டில் இதே மூன்று மாத காலக்கட்டத்தில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 67 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், மஹிந்திரா கார்களின் விற்பனை 15% அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கைகளில் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன.

மஹிந்திராவின் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையை பொறுத்தவரையில், 2 டன்களுக்கும் குறைவான கமர்ஷியல் வாகனங்கள் கடந்த மாதத்தில் 3,508 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2025 ஜூனில் 2,576 மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2 டன்னில் இருந்து 3.5 டன் வரையில் எடை கொண்ட மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் கடந்த மாதத்தில் 22 ஆயிரத்து 568 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Category June 2026 June 2025 Diff % Change YoY
Utility Vehicles 60,393 47,306 13,087 27.66
Passenger Vehicles 60,393 47,306 13,087 27.66
LCV 3,508 2,576 932 36.18
LCV 2T-3.5T 22,568 16,772 5,796 34.56
3 Wheelers 13,820 8,454 5,366 63.47
Exports 5,918 2,634 3,284 124.68
Total Vehicle Sales 1,06,207 77,513 28,694 37.02

3.5 டன்களுக்கும் அதிகமான எடை கொண்ட மஹிந்திராவின் கமர்ஷியல் வாகனங்கள் கடந்த மாதத்தில் 26 ஆயிரத்து 76 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை அனைத்தும் ஒரே சீராக 35%- 36% அதிகரித்துள்ளன. இது இல்லாமல், கடந்த மாதத்தில் 13 ஆயிரத்து 820 மூன்று சக்கர வாகனங்களையும் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் உள்நாட்டு சந்தையை தான் பெருமளவிற்கு நம்பியுள்ளது. கடந்த மாதத்தில் வெறும் 5 ஆயிரத்து 918 யூனிட் மஹிந்திரா வாகனங்கள் மட்டுமே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டில் மஹிந்திராவின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு, அதன் கார்களின் பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும். இத்தனைக்கும், மஹிந்திராவில் இருந்து SUV வகை கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

Article Published On: Wednesday, July 1, 2026, 15:08 [IST]
English summary
Mahindra and mahindra vehicles sales report of june 2026 domestic sales and exports
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out