மஹிந்திராவின் நிலைமை ஒரே வருடத்தில் இப்படி மாறும்னு யாரும் நினைத்து பார்க்கல! புதிய கார் அறிமுகம் எதுவும் இல்ல

மஹிந்திரா ஆட்டோ (Mahindra Auto) நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கு வெறும் 31 வாகனங்கள் மட்டுமே குறைவாக 99 ஆயிரத்து 969 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது இந்தியா உள்பட உலகளவில் மஹிந்திரா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை ஆகும். இதில் மஹிந்திரா கார்கள் மட்டும் எத்தனை என்பது உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக மஹிந்திரா உள்ளது. மாருதி சுஸுகி (Maruti Suzuki)-க்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. மஹிந்திராவில் இருந்து இப்போதைக்கு ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் செடான் (Sedan) ரக கார்கள் எதுவும் விற்பனையில் இல்லை.

mahindra auto total vehicles sales

நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்கள் மட்டுமே மஹிந்திரா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவ்வாறான எஸ்யூவி கார்களையே கடந்த மார்ச் மாதத்தில் 60 ஆயிரத்து 272 யூனிட்கள் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இது 2025 மார்ச் மாதத்தை காட்டிலும் 25% அதிகமாகும்.

Period Mahindra Cars Sales Number % Change
March 2026 60,272 25%
March 2025 48,048
2025 April- 2026 March 660276 20%
2024 April- 2025 March 551487

இது இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை மட்டுமே ஆகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையும் சேர்த்தால் 62 ஆயிரத்து 109 கார்கள் ஆகும். இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்த கமர்ஷியல் வாகனங்களின் எண்ணிக்கை 24,928 யூனிட்கள் ஆகும். இது 2025 மார்ச் மாதத்தை விட 11% அதிகமாகும்.

Period LCV LCV 2 T - 3.5 T 3 Wheelers (including electric)
March 2026 3,526 21,402 10,801
March 2025 3,530 18,958 7,752
2025 April- 2026 March 38,120 2,51,477 1,12,003
2024 April- 2025 March 38,995 2,17,060 85,832
Period Total Exports % Change
March 2026 3,968 -4%
March 2025 4,143
2025 April- 2026 March 40,990 18%
2024 April- 2025 March 34,654
mahindra auto total vehicles sales

ஆக மொத்தம் கடந்த மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 99,969 ஆகும். அதுவே, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்தவை இதை விட 21% குறைவாகும். 2025ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் கார்களை மட்டுமே மொத்தமாக 6 லட்சத்து 60 ஆயிரத்து 276 யூனிட்கள் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

மஹிந்திராவின் 3.5 டன்களுக்கும் அதிகமாக எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் கடந்த ஒரு வருட காலத்தில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 597 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025 ஏப்ரல்- 2026 மார்ச்சில் மஹிந்திரா கார்கள் விற்பனை எண்ணிக்கை அதற்கு முந்தைய வருடத்தை காட்டிலும் 20 சதவீதமும், கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை 13 சதவீதமும் அதிகரித்துள்ளது.

கார்களை பொறுத்தவரையில், மஹிந்திரா தற்சமயம் பிஇ.07 (BE.07) என்கிற எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. ஏற்கனவே விற்பனையில் உள்ள பிஇ 6 (BE 6) எலெக்ட்ரிக் காரின் அடிப்படையிலானதாக இது இருக்கும். இருப்பினும் பிஇ 6 அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பிறகு வருவதால் அதற்கேற்ப முற்றிலும் மாடர்னான தோற்றத்தில், தொழிற்நுட்ப அம்சங்களுடன் பிஇ.07 எலெக்ட்ரிக் காரை எதிர்பார்க்கலாம்.

மற்றப்படி, இந்த 2026ஆம் வருடத்தில் முக்கிய மஹிந்திரா கார் அறிமுகங்கள் எதுவும் பெரியதாக இல்லை. தீபாவளி சமயத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க தற்சமயம் விற்பனையில் இருக்கும் மஹிந்திரா கார்களின் ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகம் செய்யப்படலாம். ஏனெனில், தற்சமயம் உலகளவில் ஹிட் அடிக்கும் அளவிற்கு ஒரு பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனத்தை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா பிசியாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மஹிந்திரா கார் அறிமுகங்கள் எதுவும் இல்லாத போதிலும், மஹிந்திரா கார்களின் விற்பனை பெரிய அளவிற்கு சரிவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு ஒரு நல்ல அடிதளத்தை மஹிந்திரா & மஹிந்திரா அமைத்து வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு மஹிந்திரா கார்களின் எண்ணிக்கையை தனித்தனியாக இன்னொரு தொகுப்பில் பார்க்கலாம்.

Article Corrections

அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
Article Published On: Wednesday, April 1, 2026, 22:49 [IST]
English summary
Mahindra auto sold 60272 suv cars in march 2026 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+