உலகையே மிரள விட்ட இந்திய நிறுவனம்! 35 ஆயிரம் வண்டிகளுக்கு ஆர்டர் கொடுத்த முன்னணி நாடு! யார்னு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கார் போன்ற பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி, பிக்-அப் டிரக் போன்ற வர்த்தக வாகனங்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில், மஹிந்திரா நிறுவனத்திற்கு தற்போது மிகப்பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

மஹிந்திரா நிறுவனத்திற்கு இந்த ஆர்டரை வழங்கியிருப்பது அக்ரினாஸ் பங்கன் நுசாந்த்ரா (Agrinas Pangan Nusantara) என்ற நிறுவனம் ஆகும். இது இந்தோனேசியா (Indonesia) அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் மொத்தம் 35 ஆயிரம் மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்குகளை (Mahindra Scorpio Pik-Up Trucks) வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

Mahindra Scorpio Pik-Up Truck

KDKMP என சுருக்கமாக குறிப்பிடப்படும் Koperasi Desa/Kelurahan Merah Putih திட்டத்திற்காகவே 35 ஆயிரம் மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்குகள் வாங்கப்படுகின்றன என மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெளிவாக புரியும்படி சொல்வதென்றால், இந்தோனேசியாவில் தற்போது கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் மேம்பாட்டிற்காகவே 35 ஆயிரம் மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்குகள் வாங்கப்படுகின்றன. பண்ணை பொருட்களை சந்தைக்கு தடையின்றி கொண்டு செல்வது KDKMP திட்டத்தின் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும். இதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த, அதே நேரத்தில் வலிமையான வாகனங்களை வழங்குவது அவசியம்.

Mahindra Scorpio Pik-Up

எனவே கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதற்காகவே 35 ஆயிரம் மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்குகள் வாங்கப்படுகின்றன. நடப்பு 2026ம் ஆண்டிலேயே இந்த 35 ஆயிரம் மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்குகளும் டெலிவரி செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய ஏற்றுமதி ஆர்டர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

கடந்த 2024-25ம் நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனம் ஏற்றுமதி செய்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கையை விட இந்த ஒரே ஒரு ஆர்டர் மூலம் மஹிந்திரா நிறுவனம் ஏற்றுமதி செய்ய போகும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்தான். நாசிக் நகரில் உள்ள மஹிந்திராவின் தொழிற்சாலையில் இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் பொதுவாக பிக்-அப் டிரக்குகளுக்கு வரவேற்பு குறைவு. ஆனால் உலகின் ஒரு சில நாடுகளில் பிக்-அப் டிரக்குகளுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனத்தின் பிக்-அப் டிரக்குகளுக்கே உலகின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஒரு சில தென் அமெரிக்க நாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒரு இந்திய தயாரிப்பிற்கு சர்வதேச சந்தையில் இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்திருப்பது உண்மையிலேயே நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் மிகவும் கடினமான சூழலிலும் சிறப்பாக செயலாற்ற கூடியது. அத்துடன் அதை இயக்குவதற்கு மிகவும் குறைவான செலவே ஆகும். இதன் காரணமாகவே அதற்கு இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்துள்ளது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 4, 2026, 17:50 [IST]
English summary
Mahindra bags order of 35000 scorpio pik up trucks from indonesia check all details here
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+