மஹிந்திராவின் அடுத்த எலெக்ட்ரிக் எஸ்யூவி இது தான்.. பார்த்து பார்த்து செதுக்கியிருக்கும் நிறுவனம்

தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவிக்கள் வாடிக்கயாளர்களால் மிகவும் அதிகம் விரும்பப்படும் நிலையில், எஸ்யூவிக்களில் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ண விருக்கிறது எஸ்யூவி கிங்கான மஹிந்திரா (Mahindra). குறிப்பாக எலெக்டரிக் எஸ்யூவிக்கள் பிரிவில் தற்போது மஹிந்திராவின் கார்களுக்கு ஹெவி டிமாண்டு இருந்து வரும் நிலையில், அடுத்ததாக புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றை இந்திய சாலைகளில் சோதனை செய்யத் தொடங்கிவிட்டது அந்நிறுவனம்.

இணையத்தில் கசிந்து வரும் ஸ்பைஷாட் புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது இது மஹிந்திரா சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய BE.07 கான்செப்ட் எஸ்யூவி மாடலின் தயாரிப்பு நிலை வடிவம் போலவே இருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் BE 6 எலெக்ட்ரிக் எஸ்யூவியை விட இன்னும் கொஞ்சம் ப்ரீமியமான ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவியான இந்த BE.07 காரின் தயாரிப்பு நிலை வடிவம் இருக்கும்.

Mahindra BE 07 Concept

இந்தப் புதிய எஸ்யூவியை BE 7 என்ற பெயரில் மஹிந்திரா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. BE 6-ஐ விட சற்று பெரியதாக, BE 6-ஐ விட சற்று கூடுதலான விலையில் இந்தப் புதிய எஸ்யூவி வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அளவில் ஸ்கார்ப்பியோவை விட சற்று பெரிதாக, XUV 7XO-வை சற்று சிறியதாக இந்த BE 7 இருக்கும் எனத் தெரிகிறது.

பவர்ட்ரெயினைப் பொறுத்தவரை தற்போதைய எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே அம்சங்கள் தான் புதிய காரிலும் இருக்கும் எனத் தெரிகிறது. அதே 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக்குகளே எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பவர்ஃபுல்லான எஸ்யூவியை நீண்ட தூரம் வரையில் இயக்கும் திறனை இந்த பேட்டரிக்கள் ஏற்கனவே வழங்கி வருகின்றன. எனவே இவற்றை இன்னும் மேம்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறோம்.

Mahindra BE 07 Concept

எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் BE 6 உள்ளிட்ட தற்போதைய மற்ற மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தான் புதிய BE 7 காரிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரின் வெளியீடு அல்லது அறிமுகம் குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

ஆனால், தற்போது இந்தக் காரின் சோதனையை மஹிந்திரா துரிதப்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது ஆகஸ்ட் 15ம் தேதியன்று இந்தப் புதிய எஸ்யூவியின் தயாரிப்பு நிலை வடிவம் குறித்த தகவல்களை மஹிந்திராவிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாகவே ஆகஸ்ட் 15ம் தேதியன்று புதிய அறிவிப்புகளை வெளியிடுவதையும், புதிய கார்களை அறிமுகப்படுத்துவதையும் மஹிந்திரா வழக்கமாக்கியிருக்கிறது. இந்த முறை இந்த BE 7 எலெக்ட்ரிக் எஸ்யூவியை மஹிந்திரா அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15ம் தேதியன்று முழுவதுமாக வெளியாகவில்லை என்றாலும், இந்தப் புதிய எஸ்யூவியின் வெளியீடு குறித்த தகவல்களையாவது அந்நாளில் நாம் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா ஹேரியர் EV மற்றும் வின்ஃபாஸ்ட் VF7 உள்ளிட்ட 5 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக இந்த மஹிந்திரா BE 7 இருக்கும். BE.07-ன் தயாரிப்பு நிலை வடிவம் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என மஹிந்திரா முன்னரே நம்பிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களில் மஹிந்திரா புதிய உயரங்களை எட்டவுள்ளது. ஏற்கனவே அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக கடந்தாண்டு அந்நிறுவனம் வெளியிட்ட XEV 9S கார் நல்ல விற்பனையைப் பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில் மஹிந்திராவின் மற்றுமொரு சிறப்பான எலெக்ட்ரிக் எஸ்யூவியாக BE 7 இணையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Saturday, July 4, 2026, 10:50 [IST]
English summary
Mahindra be 07 concepts production ready version spied testing on indian roads
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out