ஸ்பெஷலான அம்சங்களுடன் வரும் புதிய மஹிந்திரா பிஇ-6 எலெக்ட்ரிக் கார்... ஆகஸ்ட் 15ல் ரிலீஸ்!!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று மஹிந்திரா நிறுவனம் தனது வாகன ரசிகர்களுக்காக பல்வேறு புதிய விஷயங்களையும், கார் மாடல்களையும் வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில், வரும் 15ந் தேதி சுதந்திர தினத்தன்றும் மஹிந்திரா சில புதிய மாடல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, கூடுதல் சிறப்பம்சங்களுடன் பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் புதிய மாடலை வரும் 15ந் தேதி மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, மஹிந்திரா நிறுவனம் டீசரையும் வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா பிஇ6 ஸ்போர்டெக் (Sporteq) என்ற பெயரில் வர இருக்கும் இந்த உயர் வகை மாடலில் வெளிப்புறத்தில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. ஆனால், உட்புறத்தில் பல கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, பிஇ6 ஸ்போர்டெக் எலெக்ட்ரிக் காரில் இரண்டு 12.3 அங்குல திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டராகவும், மற்றொன்று சென்டர் கன்சோல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் இருக்கும். இதுதவிர்த்து, மூன்றாவதாகவும் ஒரு டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டு இருக்கும். மொத்தமாக மூன்று ஸ்க்ரீன்கள் டேஷ்போர்டில் இடம்பெற்றிருக்கும். மஹிந்திராவின் XEV9S மற்றும் XEV 9e ஆகிய எஸ்யூவிகளில் இடம்பெற்றிருப்பது போன்ற அமைப்பு இந்த காரிலும் இடம்பெற உள்ளது.

மேலும், உட்புறத்தில் புதிய டேன் வண்ணத்திலான இன்டீரியர் மற்றும் புதிய வடிவமைப்பிலான டேஷ்போர்டு உள்ளிட்டவையும் முக்கிய மாற்றங்களாக இருக்கும். இதனால், வழக்கமான பிஇ6 எலெக்ட்ரிக் காரைவிட இந்த புதிய மாடல் அதிக சிறப்பம்சங்களுடன் கவரும் வகையில் இருக்கும்.

Mahindra BE6 Sporteq Teaser

அதேநேரத்தில், பேட்டரி மற்றும் மின் மோட்டாரிலும் எந்த மாற்றங்களும் இருக்காது என தெரிகிறது. தற்போது உள்ள பிஇ6 காரில் பயன்படுத்தப்படும் 59kWh மற்றும் 79kWh பேட்டரி ஆப்ஷன்களும் தொடர்ந்து இடம்பெற்றிருக்கும். இதில், 59kWh பேட்டரி மாடலானது 231 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க்கையும் வழங்கும் என்பதுடன் 548 கிமீ தூரம் ரேஞ்ச் வழங்கும்.

அடுத்து உயர்வகை 79kWh மாடலானது, அதிகபட்சமாக 285 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. இந்த மாடல் ஒரே சார்ஜில் சோதனை தரவுகளின்படி 683 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய பிஇ6 ஸ்போர்டெக் மாடலானது உயர் வகை வேரியண்ட்டாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பிஇ6 தோற்றத்தை மட்டும் உட்புறத்தில் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளை சேர்த்து இந்த மாடலை மஹிந்திரா களமிறக்க உள்ளது. இது நிச்சயமாக வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் மஹிந்திரா நிறுவனம் 541 பிஇ6 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை அளிக்கும் விதத்தில், அதிக சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போதைய மாடல் தொடர்ந்து இருக்குமா அல்லது புதிய மாடலுடன் சேர்ந்து விற்பனை செய்யப்படுமா என்ற விபரங்கள் வரும் 15ந் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Article Published On: Wednesday, August 12, 2026, 8:40 [IST]
English summary
Mahindra be 6 sporteq edition teaser august 15 release
மேலும்... #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out