மஹிந்திரா BE.07 எலெக்ட்ரிக் கார் அறிமுகத்துக்கு தயார்! மிரட்டலான டிசைன்... டாடா ஹாரியர் EVக்கு போட்டி!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையை அதிகரிக்க மஹிந்திரா நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே BE 6, XEV 9e, XEV 9S உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ள நிலையில், அடுத்ததாக BE.07 எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்நிலையில், இந்த காரின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி கார் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கர்நாடகாவில் சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட இந்த ஸ்பை படங்கள், மஹிந்திரா BE.07 காரின் வடிவமைப்பை இதுவரை இல்லாத அளவிற்கு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, இந்த கார் தயாரிப்பு நிலையை எட்டிவிட்டதை உறுதிப்படுத்துகிறது. இதனால், வரும் 2027ம் ஆண்டில் இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra BE 07

தயாரிப்பு நிலை மாடல்

கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட BE.07 கான்செப்ட் மாடலின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய கார் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் முன்பக்கம் பெரிய C வடிவ பகல்நேர விளக்குகள், பிரம்மாண்டமான பானட் அமைப்பு, ஸ்போர்ட்டியான முன்பக்க பம்பர் ஆகியவை வசீகரமாக இருக்கின்றன.

Also Read

ஃப்ரேம்லெஸ் டோர்கள்

இந்த காரின் மிக முக்கியமான சிறப்பம்சமாக ஃப்ரேம்லெஸ் கதவுகள் (Frameless Doors) இருக்கின்றன. இந்த வசதி இந்தியாவில் அதிக விலை கொண்ட சொகுசு கார்களில் மட்டுமே பொதுவாக காணப்படுகிறது. தற்போது மஹிந்திரா BE.07 காரிலும் இந்த வசதி இடம்பெற இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், சாதாரணமாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கதவு கைப்பிடிகளுக்கு பதிலாக, மின்சாரத்தில் இயங்கும் பாப்-அவுட் டோர் ஹேண்டில்கள் (Motorised Pop-out Door Handles) வழங்கப்பட உள்ளன. பின்புறத்தில் C வடிவ டெயில் லைட்டுகள், ஸ்பாய்லருக்கு அடியில் மறைக்கப்பட்ட பின்புற வைப்பர் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெறுகின்றன.

Mahindra BE 07

விசாலமான கேபின்

மஹிந்திரா BE.07 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 4,565 மிமீ நீளமும், 1,900 மிமீ அகலமும், 1,660 மிமீ உயரமும் கொண்டதாக கான்செப்ட் மாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வீல் பேஸ் 2,775 மிமீ நீளம் கொண்டது. இதனால் பின்புற இருக்கைகளில் அதிக இடவசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

இந்த காரில் மூன்று திரைகள் கொண்ட டேஷ்போர்டு அமைப்பு, வென்டிலேட்டட் இருக்கைகள், பவர் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட முன் இருக்கைகள், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம். மேலும், லெவல் 2+ ADAS, ஆட்டோமேட்டிக் பார்க்கிங் வசதி, 360 டிகிரி கேமரா, ADRENOX கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகியவையும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Mahindra BE 07

பேட்டரி மற்றும் ரேஞ்ச் எப்படி இருக்கும்?

மஹிந்திராவின் INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் இந்த காரில் 59 kWh, 70 kWh மற்றும் 79 kWh என மூன்று பேட்டரி தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் (RWD) வசதியுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பின்புற இடது பகுதியில் சார்ஜிங் போர்ட் அமைந்திருப்பதும் ஸ்பை படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

டாடா ஹாரியர் EVக்கு நேரடி போட்டி

மஹிந்திரா BE.07 இந்தியாவில் அறிமுகமாகும்போது டாடா ஹாரியர் EV காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற விசாலமான கேபின், பிரீமியம் வசதிகள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றுடன் இந்த கார் விற்பனைக்கு வரலாம். இந்த காரின் அறிமுக தேதி, விலை மற்றும் முழுமையான தொழில்நுட்ப விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மஹிந்திரா நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Images Source: Carsindia@reddit, Via - Cartoq

Article Published On: Saturday, October 31, 2026, 12:34 [IST]
English summary
Mahindra be07 electric suv spied design features launch timeline
மேலும்... #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X