25 வருடங்களாக டீசல் என்ஜின் உடன் மாஸ் காட்டும் மஹிந்திரா கார்! புதுசா வாங்கும் பிளானில் இருக்கிறீர்களா?

மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero), இந்தியாவின் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் கார்களுள் ஒன்று. கிட்டத்தட்ட சுமார் 25 வருடங்களாக விற்பனையில் இருந்தாலும், இன்னமும் லேடார்-ஃபிரேமில் உருவாக்கப்படும் மிகவும் சில எஸ்யூவி (SUV) வகை கார்களுள் பொலேரோவும் ஒன்றாகும். இப்படிப்பட்ட இந்த காரின் விலையை எந்தவொரு அறிவிப்பும் இன்றி ரூ.26,500 வரையில் உயர்த்தி உள்ளனர்.

இந்தியாவில் தற்சமயம் மூன்று விதமான பொலேரோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொலேரோ கிளாசிக் (Classic), பொலேரோ நியோ (Neo), பொலேரோ நியோ பிளஸ் (plus) என்பன அவையாகும். இதில் பொலேரோ கிளாசிக் தான் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் பொலேரோ ஆகும். மற்ற இரண்டும் இடையில் அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.

mahindra bolero price hike

இதில், அதிக பேரால் வாங்கப்பட்டுவரும் பொலேரோ நியோ அதிகப்பட்ச ரூ.26,500 விலை உயர்வை பெற்றுள்ளது. மற்ற இரண்டின் விலைகள் ரூ.15,500 வரையில் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளன. மார்க்கெட்டில் பொலேரோ கிளாசிக் ஆனது தற்சமயம் பி4 (B4), பி6, பி6 (ஆப்ஷ்னல்) மற்றும் பி8 என நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் விலை குறைவான பி4 வேரியண்ட்டின் விலை ரூ.500 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இது வழக்கம்போல் ரூ.7.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price)-இல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பொலேரோவின் ஆரம்ப விலை ஆனது ரூ.8 லட்சத்தை தாண்டி செல்லவில்லை. ஆனால், இதற்கடுத்த நிலையில் உள்ள பி6 வேரியண்ட்டின் விலை ரூ.25,500 அதிகரிக்கப்பட்டுள்ளது.

mahindra bolero price hike

அதேநேரம், பி6 (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் விலை அதிகப்பட்சமாக ரூ.26,500 உயர்த்தப்பட்டுள்ளது. பொலேரோ கிளாசிக்கின் டாப் வேரியண்ட்டான பி8-இன் விலை ரூ.21,500 அதிகரிக்கப்பட்டு ரூ.9.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொலேரோ கிளாசிக் காரின் புதிய அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை இந்த ரூ.9.90 லட்சமாகும். 1.5 லிட்டர் எம்ஹாவ்க்-75 டீசல் என்ஜின் உடன் மட்டுமே பொலேரோ கிளாசிக் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் இந்த காரில் வழங்கப்படுவது இல்லை. அதேபோல், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே இந்த கார் கிடைக்கிறது. பொலேரோ நியோவை பொறுத்தவரையில், இது என்4, என்8, என்10 (ஆர்), என்11 மற்றும் என்10 (ஆப்ஷ்னல்) என ஐந்து வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பொலேரோ நியோ காரின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.15,500 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகப்பட்சமாக ரூ.15,500 விலை உயர்வை இந்த காரின் விலை குறைவான என்4 வேரியண்ட் பெற்றுள்ளது. இதற்கடுத்த நிலையில் உள்ள மற்ற மூன்று வேரியண்ட்களின் விலைகள் தலா ரூ.5,000 உயர்த்தப்பட்டுள்ளன. பொலேரோ நியோவும் 1.5 லிட்டர் எம்ஹாவ்க் 100 டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகிறது.

என்ஜின் உடன் இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. விலையுயர்ந்த பொலேரோ மாடலான பொலேரோ நியோ பிளஸ் காரின் விலைகள் ரூ.9,500 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. பி4 மற்றும் பி10 என இரு விதமான வேரியண்ட்களில் பொலேரோ நியோ பிளஸ் விற்பனை செய்யப்படும் நிலையில், இதில் பி4 ரூ.9,500 விலை உயர்வையும், பி10 ரூ.4,500 விலை உயர்வையும் ஏற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எத்தனை புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், மஹிந்திரா பொலேரோவுக்கு எப்போதுமே ஒரு குறிப்பிடத்தக்க கஸ்டமர் கூட்டம் உள்ளது. இதனால், இந்த சிறிய விலை உயர்வுகள் எல்லாம் பொலேரோ கார்களின் விற்பனையை பாதிக்காது என்றே எதிர்பார்க்கிறோம். இருப்பினும், விலை உயர்வை சமன் செய்ய சில குறுகிய கால சலுகைகளை பொலேரோ கார்களுக்கு மஹிந்திரா வழங்கலாம்.

Article Published On: Saturday, May 9, 2026, 10:35 [IST]
English summary
Mahindra bolero cars price hike in india bolero neo and neo plus check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+