ஒரு தெருவையே இந்த கார்ல ஏத்தீட்டு போகலாம்! விலை இவ்ளோதானா! மார்க்கெட்டை மிரள விடும் இந்திய நிறுவனம்!

இந்தியாவில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை வாங்க வேண்டும் என்றால், ஒரு சில கார்கள் மட்டுமே, அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வரும். இதில், மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) காரும் நிச்சயம் ஒன்றாக இருக்கும்.

மஹிந்திரா பொலிரோ கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ கார், இன்றளவும் சிறப்பாக விற்பனையாகி கொண்டுள்ளது. இதற்கு ஏராளமான காரணங்களை பட்டியலிட முடியும்.

Mahindra Bolero

இருப்பினும் நிறைய பேர் பயணம் செய்ய முடியும், சரியான விலை நிர்ணயம், முரட்டுத்தனமான தோற்றம் போன்றவை எல்லாம்தான் மஹிந்திரா பொலிரோ காரின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. மஹிந்திரா பொலிரோ கார் தற்போதைய நிலையில் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், மஹிந்திரா பொலிரோ ஒன்றாகும். இதன் ஆரம்ப விலை வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9.69 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. மஹிந்திரா பொலிரோ கார் 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Mahindra Bolero Neo Plus

மஹிந்திரா பொலிரோ காரின் மற்றொரு வெர்ஷன் மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) ஆகும். இதன் ஆரம்ப விலை 8.49 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.49 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இதுவும் 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த காரின் 3வது மற்றும் கடைசி வெர்ஷன், மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் (Mahindra Bolero Neo Plus) ஆகும். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.77 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.90 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த கார், 9 சீட்டர் ஆப்ஷனில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரின் ஆம்புலன்ஸ் வேரியண்ட் மட்டும் 5 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த செய்தியில் நாங்கள் தெரிவித்துள்ள அனைத்துமே மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா பொலிரோ காரின் எந்தவொரு வெர்ஷனிலும், பெட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. இந்த கார் டீசல் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாகதான் இருந்து வருகிறது.

இதற்கு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. மஹிந்திரா பொலிரோ காரின் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), AUTO PUNDITZ தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 10,611 மஹிந்திரா பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 5,921 மஹிந்திரா பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 4,690 மஹிந்திரா பொலிரோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் 79 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு முரட்டுத்தனமான அதே நேரத்தில் செயல்திறன் மிக்க காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா பொலிரோ கார் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, January 17, 2026, 18:02 [IST]
English summary
Mahindra bolero neo plus sales report december 2025 79 per cent growth
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+