டொயோட்டா இன்னோவாவை விட ரூ.11 லட்சம் குறைவான விலை! 9 பேர் போகலாம்! மார்க்கெட்டை புரட்டி போட்ட இந்திய நிறுவனம்!
இந்தியாவில் நிறைய பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான கார்களுக்கு எப்போதுமே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கூடவே விலையை சரியாக நிர்ணயம் செய்து, சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களுடன், நல்ல 'லுக்' உடன் காரை வழங்கினால், அது இந்திய சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விடும்.
அப்படி இந்திய சந்தையில் கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துள்ள கார்களில் ஒன்றுதான் மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). மஹிந்திரா பொலிரோ கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 26 ஆண்டுகள் கடந்து விட்டன.

ஆனால் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும், சரியான விலை நிர்ணயம், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) மற்றும் முரட்டுத்தனமான தோற்றம் என நாங்கள் மேலே குறிப்பிட்ட நான்கு பாக்ஸ்களையும், மஹிந்திரா பொலிரோ 'டிக்' அடிப்பதால், இன்று வரை ஒவ்வொரு மாதமும், மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மஹிந்திரா பொலிரோ பதிவு செய்து வருகிறது.
இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. மஹிந்திரா பொலிரோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக 11,841 மஹிந்திரா பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாகவே வெறும் 8,682 மஹிந்திரா பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 3,159 மஹிந்திரா பொலிரோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் 36 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஏழு இருக்கை (7 சீட்டர்) கார்களின் பட்டியலில் (Top 10 7-Seater Cars January), மஹிந்திரா பொலிரோ 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரும், 2வது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) காரும் உள்ளன. இந்த வரிசையில் 3வது இடம் பிடித்துள்ள மஹிந்திரா பொலிரோ கார் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், மஹிந்திரா பொலிரோ ஒன்றாகும். இதன் ஆரம்ப விலை வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.80 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. மஹிந்திரா பொலிரோ காரானது, 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த காரின் 2வது வெர்ஷன் மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) ஆகும். இதன் ஆரம்ப விலையும் கூட வெறும் 8.69 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. மஹிந்திரா பொலிரோ நியோ காரும், 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த காரின் 3வது வெர்ஷன் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் (Mahindra Bolero Neo Plus) ஆகும். இதன் ஆரம்ப விலை 10.90 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.99 லட்ச ரூபாயாக உள்ளது. மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் காரானது, 9 சீட்டர் ஆப்ஷனில் விற்பனையாகிறது. கூடவே இந்த காரில் 5 சீட்டர் ஆப்ஷனில், ஆம்புலன்ஸ் வேரியண்ட் ஒன்றும் விற்பனையாகிறது.
மஹிந்திரா பொலிரோ காரின் 3 வெர்ஷன்களிலும் சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த காரின் 3 வெர்ஷன்களும் முரட்டுத்தனமான தோற்றத்தையும் கொண்டுள்ளன. இதன் காரணமாகவே மஹிந்திரா பொலிரோ கார், மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காருக்கு மாற்றாக, அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில், அதே நேரத்தில் மிகவும் குறைவான விலையில் ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா பொலிரோ மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரானது, 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதன் ஆரம்ப விலையே 18.85 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 25.67 லட்ச ரூபாயாக இருக்கிறது.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலையுடன் ஒப்பிடும்போது, மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப விலை 10.86 லட்ச ரூபாய் குறைவு ஆகும். எனவேதான் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மாற்றாக, அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில், அதே நேரத்தில் மிகவும் குறைவான விலையில் ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா பொலிரோ ஏற்றது என நாங்கள் கூறுகிறோம்.


Click it and Unblock the Notifications








