திடீரென இந்த காரின் விலையை உயர்த்திய மஹிந்திரா! ஆனா பெருசா பாதிப்பில்லை!

மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ நியோ காரின் விலையை இந்த ஜனவரி மாதம் முதல் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்த காரின் விலை ரூ20,000 வரை அதிகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ நியோ என்ற 7 சீட்டர் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரின் விலையை உயர்த்த மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் இந்த பொலிரோ நியோ என்4 பேஸ் வேரியன்டில் 1.5 லிட்டர் டர்போ டீசல் மேனுவல் இன்ஜின் காரின் விலையை ரூ20,000 வரை உயர்த்தியுள்ளது.

Mahindra Bolero Neo

இதன் மூலம் இனி இந்த மஹிந்திரா பொலிரோ நியோ கார் ரூ8.69 லட்சம் என்ற விலையிலிருந்து விற்பனை துவங்குகிறது. இதன் மூலம் இந்த கார் 2.36 சதவீதம் விலை உயர்வை பெற்றுள்ளது. இனி வேரியன்ட் வாரியிலோன பழைய மற்றும் புதிய விலை விபரங்களை காணலாம்.

மஹிந்திரா பொலிரோ நியோ காரில் என் 4 வேரியன்ட் ரூ8.49 லட்சத்தில் விற்பனையாகி வந்தது.தற்போது ரூ20,000 அதிகமாகி ரூ8.69 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. இது 2.36 சதவீத விலையேற்றம் என்8 வேரியன்ட் ரூ9.29 லட்சத்தில் விற்பனையாகி வந்தது. ரூ16,000 அதிகரித்து ரூ9.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது 1.72 சதவீத வளர்ச்சியாகும்.

Mahindra Bolero Neo

இது போக என்10, என்11. என்10(0) ஆகிய வேரியன்ட்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகிறது. அதன்படி என் 10 வேரியன்ட் ரூ9.79 லட்சம் என்ற விலையிலும், என் 11 வேரியின்ட் ரூ9.99 லட்சம் என்ற விலையிலும் என்10 (O) வேரியன்ட் ரூ10.49 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறுது.

இந்த காரில் 1.45 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இது 100 பிஎச்பி பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் வருகிறது.இந்த கார் ஒரே நேரத்தில் ஆன்ரோடு ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்தாதாக இருக்கிறது. இந்த காரை அரசு அதிகாரிகள் அதிகம் பயன்படுத்திவருகின்றனர். இந்த கார் சமூகத்தில் ஒரு அந்தஸ்தை உருவாக்குகிறது. குறைந்த விலையில் அதிக நபர்கள் பயணிக்கும் திறன் கொண்ட வாகனமாக இது இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா நிறுவன தயாரிப்புகளுக்கு தனி மதிப்பு இருக்கிறது. இதனால் அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சிறப்பாக விற்பவனையாகி வருகிறது. இந்நிலையில் விலையேற்றம் தற்போது ரூ20,000 தான் அதிகமாகியுள்ளது. இது நிச்சயம் பெரிய விலையேற்றம் இல்லை அதுவும் பேஸ் வேரியன்ட்களில் மட்டுமே விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இது விற்பனையை பெரிய அளவில் பாதிக்காது. மாறாகவிற்பனை அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. இந்த காரின் விலை டாப் வேரியன்ட் ரூ10.45 லட்சம் தான் என்பதால் மக்கள் பலர் இந்த மஹிந்திரா பொலிரோ நியோ காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 20, 2026, 12:30 [IST]
English summary
Mahindra bolero neo price hike up to 20000 january 2026
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X