டேய் பரமா நீயுமாடா... இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மஹிந்திரா நிறுவனத்தின் திடீர் அறிவிப்பு...

2026-27 நிதியாண்டு கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கியது. பொதுவாக புதிய நிதியாண்டு தொடங்கும்போது, கார்களின் விலை உயர்த்தப்படுவது வழக்கம். இதன்படி நடப்பு 2026-27 நிதியாண்டு தொடங்கிய உடனேயே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) ஆகிய நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை உயர்த்தி விட்டன.

அத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), ஆடி (Audi) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) ஆகிய சொகுசு கார் நிறுவனங்களும், தங்கள் கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. மேற்கண்ட 5 நிறுவனங்களின் விலை உயர்வும் (Price Hike), கடந்த ஏப்ரல் 1ம் தேதியே அமலுக்கு வந்து விட்டன.

Mahindra Bolero

இதை தொடர்ந்து மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தற்போது விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி மஹிந்திரா நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலை அதிரடியாக உயர்த்தபடவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. இது குறித்து டீம்-பிஹெச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலை அதிகபட்சமாக 2.5 சதவீதம் வரை உயரவுள்ளது. ஆனால் வாகனங்கள் மற்றும் அதன் வேரியண்ட்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஒவ்வொரு வாகனம் மற்றும் அதன் வேரியண்ட்களின் விலை துல்லியமாக எவ்வளவு உயர்கிறது? என்பது வரும் நாட்களில் அறிவிக்கப்படும். எனினும் அதிகபட்சமாக 2.5 சதவீதம் வரை மட்டுமே விலை உயர்த்தப்படும்.

Mahindra BE 6

மஹிந்திரா நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்கள் லைன் அப்பில், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), மஹிந்திரா தார் (Mahindra Thar), மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx), மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) ஆகிய கார்கள் எல்லாம் உள்ளன.

அத்துடன் மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero), மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் (Mahindra Bolero Neo Plus) ஆகிய கார்களும், மஹிந்திரா நிறுவனத்தின் ஐசி இன்ஜின் லைன்-அப்பில் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.

ஆனால் மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விலை உயராது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் லைன்-அப்பில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO) மிகவும் முக்கியமான மாடலாக உள்ளது.

அத்துடன் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e), மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) மற்றும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) ஆகியவையும் மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் லைன்-அப்பில் உள்ள மிகவும் முக்கியமான மாடல்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இனி சற்று அதிக தொகையை செலவு செய்ய தயாராகி கொள்வது சிறந்தது. ஆனால் இந்த விலை உயர்வு காரணமாக இந்திய சந்தையில் கார்களின் விற்பனை குறைவதற்கான வாய்ப்புகள் எல்லாம் இல்லை. விலை உயர்த்தப்பட்டாலும் கூட கார் விற்பனை தொடர்ந்து உயரும் என்றே நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 3, 2026, 18:30 [IST]
English summary
Mahindra cars to get costlier from april 6 check all details here
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+