டாடா, டொயோட்டாவை தூக்கி சாப்பிட்ட மஹிந்திரா எஸ்யூவிக்கள்.. ஃபார்ச்சூனரைக் கூட விட்டு வைக்கல!
இந்தியாவில் தற்போது மற்ற எந்தவித பாடி வகைகளை விடவும் எஸ்யூவி வகை கார்களுக்குத் தான் வாடிக்கையாளர்களிடம் அதிக மவுசு இருக்கிறது. 2020ல் முன்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கி தற்போது எஸ்யூவி என்ற பெயர் கொண்ட வாகனங்களையே அதிகளவிலான மக்கள் வாங்க விரும்புகிறார்கள். நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் மனநிலை மாற்றத்திற்கு ஏற்ப, மைக்ரோ எஸ்யூவி முதல், ஃபுல்-சைஸ் எஸ்யூவி வரை அனைத்து அளவுகளிலும் வகை வகையான எஸ்யூவிக்களை விற்பனை செய்து வருகின்றன.
ஆனால் ஒரு பத்தாண்டிற்கு முன்னர் எடுத்துக் கொண்டால் எஸ்யூவி என்பது அனைத்து மக்களும் விரும்பி வாங்கும் ஒரு வாகனமாக இருக்கவில்லை. செடான் தான் ப்ரீமியம் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இருந்து வந்தது. பட்ஜெட் வாடிக்கையாளர்கள் ஹேட்ச்பேக்குகளை விரும்பினர். இதனால் 4.5 மீட்டர்கள் என்ற அளவிற்கு மேல் தான் எஸ்யூவிக்களே அதிகளவில் விற்பனையில் இருந்தன.

இப்போதும் இந்த உண்மையான எஸ்யூவி பிரிவில் அதிகளவிலான கார்கள் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் எஸ்யூவி கிங் என்றால் அது மஹிந்திரா தான். எனவே இந்தக் பிரிவில் அதிக கார்களை விற்பனை செய்ய வேறு எந்த நிறுவனத்தால் முடியும். மஹிந்திராவின் எஸ்யூவிக்களே இந்த 4.5 மீ முதல் 4.8 மீ வரையிலான எஸ்யூவி விற்பனைப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மஹிந்திரா ஸ்கார்பியோ/ N மாடல் தான் இந்தப் பிரிவின் கிங். இந்தக் கார் மாடல் கடந்த மார்ச் மாதம் மட்டும் 14,578 யூனிட்டுகள விற்பனையாகியிருப்பதுடன், இந்தப் பிரிவில் 37.21% சந்தைப் பங்குகளையும் கொண்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் 9,210 யூனிட்டுகளுடன் மஹிந்திராவின் மற்றொரு எஸ்யூவியிான XUV 7XO இருக்கிறது. இந்த மாடலை கடந்த ஜனவரி மாதம் தான் அந்நிறுவனம் அப்டேட் செய்தது.

மூன்றாவது இடத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் இருக்கிறது. மிகவும் ரக்கடான எஸ்யூவியான இது மூன்றாவது இடத்தில் இருந்தாலும், இரண்டாவது இடத்தில் இருக்கும் XUV 7XO-வுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக 3,795 யூனிட்டுகளே கடந்த மார்ச் மாதம் விற்பனையாகியிருக்கிறது. இது கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 11.88% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தான் ஃபார்ச்சூனரின் ஒவ்வொரு மாத சராசரி விற்பனை அளவாகவும் இருந்து வருகிறது.
நான்காம் இடத்தல் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரா XEV 9S உள்ளது. இந்தக் கார் சுமார் 3,254 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. விரைவில் டொயோட்டா ஃபார்ச்சூனரை பின்தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாம் இடத்தில் டாடாவின ஹேரியர் மற்றும் ஹேரியர் EV உள்ளது. எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் ஹேரியர் மாடல்கள் சேர்ந்து மொத்தமாக 2,826 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 123.40% அதிகமாகும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் டீசல் இன்ஜின் கொண்ட ஹேரியர் மாடல் மட்டுமே விற்பனையில் இருந்தது. அதன் பின்னர் ஜூன் மாதம் ஹேரியர் EV மாடலையும், 2026ன் தொடக்கத்தில் பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஹேரியர் மாடலையும் டாடா விற்பனைக்குக் கொண்டு வந்தது. அவை ஹேரியரின் விற்பனையை உயர்த்தியிருப்பதை இந்தத் தரவு மூலம் நேரடியாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் மஹிந்திரா மற்றொரு எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான XEV 9e மற்றும் டாடாவின் சஃபாரி ஆகிய மாடல்கள் உள்ளது. XEV 9e எலெக்ட்ரிக காரானது கடந்த மார்ச் மாதம் 1,759 யூனிட்டுகளும், சஃபாரி மாடலானது 1,530 யூனிட்டுகளும் விற்பனையாகி உள்ளன. இந்த டாப் 7 இடங்களைக் கடந்து அடுத்திருக்கும் மாடல்கள் அனைத்தும் 1,000 யூனிட்டுகளுக்கும் குறைவாகவே விற்பனையாகியிருக்கின்றன.
இதற்கு மேலாக ஹூண்டாய் அல்கஸார், எம்ஜி ஹெக்டர்/ பிளஸ், ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வாகன் டேரான், ஜீப் மெரிடியன், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வாகன் டிகுவான் மற்றும் சிட்ரன் C5 ஏர்கிராஸ் ஆகிய எஸ்யூவி கார்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இதில் கடைசி இடத்தில் இருக்கும் C5 ஏர்கிராஸ் மாடலானது கடந்த மார்ச் மாதம் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1,000 யூனிட்டுகளுக்குக் கீழாக விற்பனையாகி வரும் கார்களில் நிறைய மாடல்கள் ரூ.25 லட்சத்திற்கும் மேலான விலையைக் கொண்டிருக்கும் ப்ரீமியம் ரகத்தைச் சேர்ந்தவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதிக விலையைக் கொண்டும், அதிக யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கும் ஒரு கார் என்றால் அது டொயோட்டா ஃபார்ச்சூனர் தான். இந்த ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலானது ரூ.34.76 லட்சம் முதல் ரூ.50.46 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 4.5 மீ முதல் 4.8 மீ வரையிலான எஸ்யூவி பிரிவில் அதிகளவிலான கார்களை விற்பனை செய்துவது மஹிந்திரா. நிறைய மாடல்களை விற்பனையில் வைத்திருப்பதோடு, அனைத்துமே அதிக யூனிட்டுகள் விற்பனையாகவும் செய்கிறது. ஒட்டுமொத்தமாக 28,000 கார்கள் இந்தப பிரிவில் கடந்த மார்ச் மாதம் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.
அதற்கடுத்ததாக டாடா மோட்டார்ஸ் 4,000-த்திறகும் மேலான கார்களை இந்தப் பிரிவில் விற்பனை செய்துள்ளது. ஒரே ஒரு ப்ரீமியம் கார் மாடலை மட்டும் இந்தப் பிரிவில் விற்பனை செய்து வரும் டொயோட்டா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் தான் ஏன் எஸ்யூவி கிங் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறது மஹிந்திரா.


Click it and Unblock the Notifications