ஒரே மாதத்தில் 15 ஆயிரம் கஸ்டமர்களை ஈர்த்த மஹிந்திரா கார்! 7 பேர் போகக்கூடிய புதிய காருக்கும் புக்கிங் குவியுது

2025 டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா (Mahindra) 50,946 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது 2024 டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்ததை காட்டிலும் விட 23% வளர்ச்சி ஆகும். 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 10% குறைந்தாலும், கடந்த டிசம்பரில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக 2025ஆம் ஆண்டை மஹிந்திரா நிறைவு செய்துள்ளது.

கடந்த மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா காராக ஸ்கார்பியோ (Scorpio) மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. 15,885 யூனிட்கள் விற்பனையுடன், 2024 டிசம்பரை காட்டிலும் 30% வளர்ச்சியை கடந்த மாதத்தில் ஸ்கார்பியோ பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தின் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் ஸ்கார்பியோ கார்களின் பங்கு மட்டுமே 12.6% ஆகும்.

mahindra cars-wise sales in december 2025

2024 டிசம்பர் உடன் மட்டுமின்றி, 2025 நவம்பரை விடவும் 2% அதிகரித்துள்ள ஸ்கார்பியோ விற்பனை, நிலையான முன்பதிவுகளை பெற்று வருகிறது. ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரு விதமான ஸ்கார்பியோ கார்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் கூட்டு விற்பனை எண்ணிக்கையே மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை ஆகும்.

ஸ்கார்பியோவுக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ள மஹிந்திரா பொலேரோ (Bolero) சீரான விற்பனையை கடந்த மாதத்திலும் தொடர்ந்துள்ளது. 10,611 யூனிட்கள் விற்கப்பட்டு, 2024இன் இதே மாதத்தை விட 79% வளர்ச்சியை பதிவு செய்துள்ள பொலேரோவின் விற்பனை 2025 நவம்பர் உடன் ஒப்பிடுகையிலும் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.

mahindra cars-wise sales in december 2025

மஹிந்திராவின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) கடந்த மாதத்தில் 9,422 யூனிட்டுகள் விற்கப்பட்டு 35% வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால் 2025 நவம்பரை விட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்களின் விற்பனை 11% சரிந்துள்ளது. இதற்கடுத்து, தார் (Thar) 9,339 யூனிட்டுகள் விற்பனையுடன் இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது.

தாரின் விற்பனை 2024 டிசம்பரை விட 22% வளர்ச்சி பெற்றிருந்தாலும், 2025 நவம்பரை விட 9% குறைந்துள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 5-கதவு தார் ராக்ஸ் (Roxx) மாடலின் அம்சங்களுடன் கூடிய மூன்று கதவுகள் கொண்ட தார் இந்த ஆண்டு மார்க்கெட்டிற்கு வருகிறது. மஹிந்திராவின் சமீபத்திய புதிய மாடல்களை பொறுத்தவரையில், எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (XUV 7XO) டிசம்பரில் 971 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

mahindra cars-wise sales in december 2025

இதன் பழைய தலைமுறை மாடலான எக்ஸ்யூவி700 (XUV700) காரும் கடந்த மாதத்தில் 453 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் உள் மற்றும் வெளி வடிவமைப்புகளில் எக்ஸ்யூவி700 காரை விட பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிரிவில், எக்ஸ்இவி 9இ (XEV 9e) 2,154 யூனிட்கள் விற்பனை உடன் கடந்த ஆண்டில் நவம்பரை விட டிசம்பரில் 51% வளர்ச்சி கண்டுள்ளது. பிஇ 6 (BE 6) 1,481 யூனிட்கள் விற்பனை உடன் 2025 நவம்பரை விட 13% வளர்ச்சி கண்டுள்ளது.

Model Dec 2025 Dec 2024 YoY Change
Scorpio 15,885 12,195 30%
Bolero 10,611 5,921 79%
XUV 3XO 9,422 7,000 35%
Thar 9,339 7,659 22%
XEV 9e 2,154 0 0%
BE 6 1,481 0 0%
XUV 7XO 971 0 0%
XUV 700 453 7,337 -94%
Marazzo 80 16 400%
XUV400 59 1,296 -95%
TOTAL 50,946 41,424 23%

Table Source: Autopunditz

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்திற்கு கடந்த சில வருடங்களாகவே கார்கள் விற்பனையில் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இந்த நிலையில், பொலேரோவின் விற்பனை மீண்டும் அதிகரிக்க துவங்கியிருப்பது மஹிந்திராவுக்கு கூடுதல் பலமாக இருக்கும். சமீபத்திய மிட்-லைஃப் அப்டேட், பல்வேறு சந்தைகளில் பொலேரோவின் சிறப்பான விற்பனைக்கு உதவியது. புதிய எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) மற்றும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (XUV 3XO EV) உடன் எலெக்ட்ரிக் கார்கள் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்த அனைத்து விதங்களிலும் மஹிந்திரா தயாராகி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 10, 2026, 16:16 [IST]
English summary
Mahindra cars wise sales report of december 2025 scorpio and bolero top on list
மேலும்... #mahindra #car sales #scorpio #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X