எத்தனை கோடினு கணக்கே இல்ல! அட்சய திருதியை நாளில் தங்கத்துக்கு இணையாக இன்னொரு பொருளை வாங்கி குவித்த மக்கள்!

இந்தியாவில் மங்களகரமான நாட்களில், நகை மற்றும் கார் போன்றவற்றை வாங்குவது வழக்கம். குறிப்பாக அட்சய திரிதியை (Akshaya Tritiya) நாளில் நகை கடைகளில் (Jewellery) கூட்டம் அலை மோதும். அதற்கு இணையாக கார் ஷோரூம்களிலும் (Car Showrooms), வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.

இதன்படி இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 19) அட்சய திரிதியை பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், நகை கடைகளிலும் மற்றும் கார் ஷோரூம்களிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் ஷோரூம்கள் வழக்கத்தை விட பரபரப்பாக இயங்கியுள்ளன.

Car Delivery

ஏனெனில் நேற்று ஒரே நாளில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 610க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இந்த தகவல் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மஹிந்திரா நிறுவனம் ஒரே நாளில் இவ்வளவு அதிகமான எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்வது இது முதல் முறை கிடையாது. முன்னதாக சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது கடந்த மார்ச் 19ம் தேதியன்று உகாதி (Ugadi) பண்டிகையை முன்னிட்டு, 600க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்களை மஹிந்திரா நிறுவனம் டெலிவரி செய்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Mahindra XEV 9e

மஹிந்திரா நிறுவனம் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S), மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e), மஹிந்திரா எக்ஸ்இவி 9இ சினிலக்ஸ் (Mahindra XEV 9e Cineluxe), மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) மற்றும் மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் (Mahindra BE 6 Formula E Edition) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 (Mahindra XUV 400) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும் மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதில், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 19.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 21.90 லட்ச ரூபாய் ஆகவும், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ சினிலக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 29.35 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.

இந்த வரிசையில் மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 18.90 லட்ச ரூபாய் ஆகவும், மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 23.69 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலை முறையே 17.49 மற்றும் 13.89 லட்ச ரூபாயாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் நேற்று ஒரே நாளில் பல கோடி ரூபாய் மதிப்புடைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருக்கும் என்பது உறுதி. ஆனால் எவ்வளவு கோடி ரூபாய் மதிப்புடைய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டது? என்பது குறித்த துல்லியமான தகவல்கள் எதையும் மஹிந்திரா நிறுவனம் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, April 20, 2026, 16:54 [IST]
English summary
Mahindra delivers 610 electric cars in 1 day akshaya tritiya all details
மேலும்... #mahindra #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+