ஒரே நாளில் 600 எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி! இந்திய நிறுவனத்தை பார்த்து மிரண்டு போன வெளிநாட்டு கம்பெனிகள்!
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களுக்கான (Electric Cars) 'டிமாண்ட்' நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. ஆனால் ஒரு சில நிறுவனங்களால் மட்டுமே எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதனைகளை படைக்க முடிகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் ஒன்றாகும்.
மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e, மஹிந்திரா எக்ஸ்இவி 9இ சினிலக்ஸ் (Mahindra XEV 9e Cineluxe), மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் (Mahindra BE 6 Formula E Edition), மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) போன்ற எலெக்ட்ரிக் கார்களை எல்லாம் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 (Mahindra XUV 400) போன்ற எலெக்ட்ரிக் கார்களையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
இதற்கு மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து தற்போது வெளி வந்துள்ள ஒரு அறிவிப்பே சாட்சி. மஹிந்திரா நிறுவனம் நேற்று (மார்ச் 19) மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி (Delivery) என்பதுதான் அந்த அறிவிப்பு ஆகும்.

யுகாதி (Ugadi) பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த மங்களகரமான நாளில் புதிய வாகனங்களை டெலிவரி எடுக்க பலரும் விரும்புவார்கள். இதை முன்னிட்டுதான் மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது.
இது இந்திய சந்தையில் இயங்கி வரும் பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்களின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். அதாவது வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் ஒட்டுமொத்தமாக வெறும் 421 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
மறுபக்கம் தென் கொரியாவை சேர்ந்த கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் ஒட்டுமொத்தமாக முறையே 377 மற்றும் 341 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தன. ஆனால் இந்த நிறுவனங்களின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்களை மஹிந்திரா நிறுவனம் ஒரே நாளில் விற்பனை செய்து அசத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் டிசைன் (Design), அதிநவீன வசதிகள் (Features), சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களிலும் அசத்துகின்றன. அத்துடன் அவற்றின் விலை (Price) நிர்ணயமும் சிறப்பாக உள்ளது. இதன் காரணமாகவே மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








