புகார் கொடுத்தால்தான் காரில் சரி பண்றாங்க! ஏற்கனவே காரை வாங்கியவர்கள் நிலைமை தான் திண்டாட்டம்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தனது எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், சஸ்பென்ஷன் (Suspension) அமைப்பு குறித்த எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு புதிய 'கஸ்டம்' (Custom) ட்ரைவ் மோட் (Drive Mode)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, காரை பயன்படுத்துபவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஒரு டிரைவ் மோட்-ஐ செட் செய்துக் கொள்ளலாம்.

முன்னதாக, மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரின் 'பேக் த்ரீ' (Pack Three) வேரியண்ட்டின் அடாப்டிவ் சஸ்பென்ஷன் மிகவும் மென்மையாக இருப்பதாக இந்த எலெக்ட்ரிக் காரை ஓட்டி பார்த்தவர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. சாதாரணமாக மேடு பள்ளம் இல்லாத சாலைகளிலும் கூட, காரின் வேகத்தை அதிகரிக்கும் போது தொடர்ச்சியான மற்றும் வெளிப்படையான அதிர்வுகள் தெரிந்து, அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது.

mahindra xev 9s electric car new custom drive mode

அதேநேரம், இந்த காரின் ரேஸ் (Race) மோடில் உள்ள உறுதியான டாம்பிங் (damping) அமைப்பு இந்த பிரச்சனையை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது. ஆனால், ரேஸ் மோட் காரின் செயல்திறனை மையமாகக் கொண்டிருப்பதால், இது சஸ்பென்ஷனை உறுதியாக்குவதுடன், த்ராட்டில் ரெஸ்பான்ஸ், ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் ஆகியவற்றையும் சரிசெய்கிறது.

இவ்வாறு அனைத்தையும் இயங்க வைத்து அதிக ஆற்றலை எடுத்துக்கொள்வதாலும், எப்போதும் உறுதியான டிரைவிங் அனுபவத்தை வழங்குவதாலும் இந்த மோட் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, மஹிந்திரா தற்போது எக்ஸ்இவி 9எஸ் காரில் புதிய 'கஸ்டம்' ட்ரைவ் மோட்-ஐ சேர்த்துள்ளது. இந்த அம்சம் காரின் பேட்டரி & எலெக்ட்ரிக் மோட்டார் அடங்கிய பவர்ட்ரெய்ன் (powertrain), ஸ்டீயரிங் (steering), சஸ்பென்ஷன் (suspension) மற்றும் க்ளைமேட் சிஸ்டம் (climate system) ஆகிய தனித்தனி அமைப்புகளின் செயல்பாடுகளை ஓட்டுநரின் விருப்பப்படி சரிசெய்ய அனுமதிக்கிறது.

mahindra xev 9s electric car new custom drive mode

இதன் மூலம், ஓட்டுநர்கள் வெவ்வேறான சூழ்நிலைகளிலும் காரை சுதந்திரமாக கையாள முடியும். உதாரணமாக, பவர்ட்ரெய்ன் மற்றும் ஸ்டீயரிங் அமைப்புகளை கம்ஃபோர்ட் (Comfort) மோடில் வைத்துக்கொண்டு, சஸ்பென்ஷனை ரேஸ் மோடில் உள்ளபடி உறுதியானதாக வைத்திருக்கலாம். இந்த புதிய 'கஸ்டம்' மோட், ஏற்கெனவே இருந்த டீஃபால்ட் (Default), எவ்ரிடே (Everyday), ரேஞ்ச் (Range) மற்றும் ரேஸ் (Race) ஆகிய மோட்களுடன் ஒரு கூடுதல் தேர்வாக வந்துள்ளது.

இந்த புதிய வசதி, அடாப்டிவ் டாம்பர்கள் (adaptive dampers) கொண்ட எக்ஸ்இவி 9எஸ் காரின் பேக் த்ரீ வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். பேசிவ் டாம்பிங் (passive damping) கொண்ட பேக் ஒன் மற்றும் பேக் டூ வேரியண்ட்களில் இந்த அம்சம் கிடைக்காது. இந்த புதிய ட்ரைவ் மோட் ஆனது கார் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலேயே சேர்க்கப்படுகிறது.

புதிய எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகள் கடந்த ஜனவரி 26 அன்று தொடங்கின. இந்தியாவின் முதல் பட்ஜெட் விலையிலான 7-இருக்கை எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் என்கிற பெருமையுடன், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதன் சில வேரியண்ட்டுகளுக்கு 9 மாதங்கள் வரை டெலிவிரிக்கான காத்திருப்பு காலம் இருப்பது, சந்தையில் இந்த எலெக்ட்ரிக் காருக்கான டிமாண்டை காட்டுகிறது. ஏற்கனவே எக்ஸ்இவி 9எஸ் காரை டெலிவிரி பெற்றுவிட்டவர்களுக்கு இந்த புதிய 'கஸ்டம்' ட்ரைவ் மோட் எவ்வாறு வழங்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட் மூலமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் மூலமாகவோ இந்த வசதி கிடைக்க வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையுயர்ந்த மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்த வரவேற்பை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்திய அதன் விலை குறைவான வெர்சன் தான் எக்ஸ்இவி 9எஸ் ஆகும். குறைந்த விலையில் வழங்கினாலும் காரில் பயணம் சவுகரியமாக இருக்க வேண்டியது அவசியம். அதனை புரிந்துக் கொண்டு மஹிந்திரா நிறுவனம் உடனடியாக தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 26, 2026, 16:22 [IST]
English summary
Mahindra introducing new custom drive mode in xev 9s electric car
மேலும்... #mahindra #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+