நாடே எதிர்பார்த்த மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு... ஃபுல் சார்ஜில் சென்னை-டூ-பாண்டிச்சேரி போய்டு வரலாம்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிரிவை விரிவாக்கி, புதிய 'எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி' (XUV 3XO EV) என்கிற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.13.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்கள் வரிசையில் எக்ஸ்யூவி400 (XUV400) காருக்குக் கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யூவி காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நகர்ப்புற மற்றும் குடும்பப் பயனர்களை இலக்காகக் கொண்ட இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி, இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் உயர் ரக வேரியண்ட்டான 'ஏ.எக்ஸ்.7எல்' (AX7L)-ஐ ரூ.14.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வாங்கலாம். எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி காருக்கு ஆற்றல் அளிக்க வழங்கப்பட்டுள்ள ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் 150 எச்பி ஆற்றலையும், 310 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

Mahindra XUV 3XO EV Variant-Wise Price List
Variant Battery Pack Ex-Showroom Price (INR)
AX5 (No Charger) 39.4 kWh ₹13.89 Lakh
AX5 (with 7.2kW Charger) 39.4 kWh ₹14.39 Lakh
AX7L (No Charger) 39.4 kWh ₹14.96 Lakh
AX7L (with 7.2kW Charger) 39.4 kWh ₹15.46 Lakh
mahindra xuv 3xo ev launched

இது 39.4 kWh பேட்டரி பேக்குடன் இணைந்து செயல்படுகிறது. பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், காரை அதிகப்பட்சமாக 285 கிமீ தொலைவிற்கு இயக்கி செல்லலாம் என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 50 kW சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 50 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் நிரப்பிவிட முடியும்.

வீட்டு மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கான AC சார்ஜிங் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில், 7.2 kW AC சார்ஜருக்கு கூடுதலாக ரூ.50,000 செலுத்த வேண்டும். புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி கார் 0-100 கிமீ வேகத்தை 8.3 வினாடிகளில் அடையும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் ஃபன் (Fun), ஃபாஸ்ட் (Fast) மற்றும் ஃபியர்லெஸ் (Fearless) என மூன்று டிரைவ் மோட்கள் இடம்பெற்றுள்ளன.

mahindra xuv 3xo ev launched

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆனது ஏற்கனவே விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி400 காரின் 378 லிட்டர் பூட் ஸ்பேஸை விட சிறிய பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி எலெக்ட்ரிக் கார் அதன் பெட்ரோல் என்ஜின் பதிப்பான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஒட்டுமொத்த தோற்றத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இருப்பினும் எலெக்ட்ரிக் கார் என்பதால், மூடிய முன்பக்க கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள் மற்றும் தனித்துவமான லைட்டிங் அமைப்பு உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனத்திற்கே உரித்தான வெளிப்புற அம்சங்களைப் பெற்றுள்ளது. உட்புறத்தில், சென்டர் கன்சோல், ஏசி வென்ட்கள் மற்றும் ஸ்டீயரிங் சக்கரத்தில் மஹிந்திராவின் புதிய 'இரட்டை இறக்கை' லோகோ ஆகியவற்றில் வெண்கல நிற ஹைலைட்கள் கார் கேபினின் தனித்துவத்தைக் கூட்டுகின்றன.

மேலும், இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் கேபினில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் சென்ட்ரல் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட இரட்டைத் திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இது கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் பலவிதமான டிரைவ் மோட்களையும் உள்ளடக்கி உள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், இபிடி (EBD) உடன் ஏபிஎஸ் (ABS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ECS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவை அடங்குகின்றன.

mahindra xuv 3xo ev launched

அதேநேரம், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி காரின் உயர் வேரியண்ட்கள் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், சாலையில் ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி மற்றும் தானியங்கி அவசரகால பிரேக்கிங் போன்ற லெவல்-2 அடாஸ் (ADAS) அம்சங்களுடன் கிடைக்கும். இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் (Bookings) தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி முதல் இதன் டெலிவரிகள் (Deliveries) தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி காரின் அறிமுகத்தின் மூலம் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் வரிசை ஆனது நான்கு மாடல்களாக விரிவடைந்துள்ளது. புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி ஆனது எக்ஸ்யூவி400 காரை திறம்பட மாற்றி, டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடிப் போட்டியாக களமிறங்கப்பட்டுள்ளது.

இது, பெட்ரோல் காரில் இருந்து கொண்டுவரப்பட்ட மஹிந்திராவின் தற்போதைய ஒரே எலெக்ட்ரிக் கார் ஆகும். மற்ற எக்ஸ்இவி 9இ (XEV 9e), எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) மற்றும் பிஇ 6 (BE 6) எலெக்ட்ரிக் கார்கள் மஹிந்திராவின் முற்றிலும் புதிய 'போர்ன்-எலெக்ட்ரிக்' (Born-Electric) வகையைச் சேர்ந்தவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 6, 2026, 23:11 [IST]
English summary
Mahindra launched new xuv 3xo ev electric car check price features range all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X