31 நாளில் லட்சம் பேர் இந்த கம்பெனி காரை தேடிதேடி வாங்கிடாங்க! அப்படி என்ன இது தெரியுமா?
மஹிந்திரா நிறுவனத்தின் கடந்த ஜனவரி மாத விற்பனை விபரங்கள் வெளியாகி உள்ளன. இதன்படி நிறுவனம் மொத்தம் 63,500க்கும் மேற்பட்ட எஸ்யூவிகளை இந்தியாவில் ஒரே மாதத்தில் விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டை விட தற்போது 25% அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 1,04,039 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டின் கூட்டு எண்ணிக்கை ஆகும். இது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் எண்ணிக்கை ஒப்பிடும்போது 24 சதவீதம் அதிகமாகும்.

இந்த விற்பனை எண்ணிக்கை என்பது யூட்டிலிட்டி வாகனங்கள் கமர்சியல் வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் கூட்டு எண்ணிக்கையை உள்ளன. நம் அனைவரும் எதிர்பார்த்தபடி யூட்டிலிட்டி வாகனங்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 63,051 எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் விற்பனையான 50,659 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது 25% அதிகமாகும்.
இந்த நிதியாண்டில் இந்நிறுவனம் மற்றும் 5,39,986 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் மொத்தம் 45,039 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. அதை ஒப்பிடும்போது 19 சதவீதம் அளவுக்கு நடப்பு நிதியாண்டில் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

கமர்சியல் வாகனங்களின் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது உள்நாட்டில் மட்டும் ஜனவரி மாதம் மொத்தம் 27, 656 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையை ஒப்பிடும்போது 22 சதவீதம் அதிகமாகும் இலகுரக கமர்சியல் வாகனங்கள் அதாவது இரண்டு டன் எடைக்கு குறைவான சரக்குகளை ஏற்றி செல்லும் கமர்சியல் வாகனங்களில் விற்பனை 39 வாகனங்களாக உள்ளன. இது 13 சதவீத அதிகரிப்பை பெற்றுள்ளது மற்றும் 2 முதல் 3.5 டன் வரை எடை சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் விற்பனை 23,647 ஆக உள்ளது. இது 23 சதவீத வளர்ச்சி பெற்று உள்ளது. கமர்சியல் வாகனங்களில் பொலிரோ பிக் அப் ரேஜ் வாகனத்தின் விற்பனை சிறப்பாக இருக்கிறது.
மூன்று சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை மஹிந்திரா லாஸ்ட் மேன் ஒபிலிட்டி நிறுவன வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. மொத்தம் 9056 வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது 28% அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது நடப்பு நிதியாண்டில் கலந்து ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் மொத்தம் 92,012 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன இது 28% வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஏற்றுமதியும் சிறப்பாக இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் மற்றும் 3577 வாகனங்களை கடந்த ஜனவரி மாதம் மட்டும் ஏற்றுமதி செய்துள்ளன. இதுவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்றுமதியான 3440 என்ற வாகன எண்ணிக்கையை ஒப்பிடும்போது தற்போது 5% அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதுவே நிதியாண்டு கணக்காக பார்க்கும்போது நடப்பு நிதியாண்டில் மொத்தம் 33,638 வாகனங்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மொத்தம் 27452 வாகனங்கள் ஏற்றுமதி ஆகிறது தற்போது 23 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி தான் தனது மஹிந்திரா 7 எக்ஸ் ஓ மற்றும் கார்களின் புக்கிங் தற்போது துவக்கி உள்ளது. இந்த கார்களுக்கு 93,689 புக்கிங் அமைந்துள்ளது அதுவும் வெறும் 5 மணி நேரத்தில் குவிந்துள்ளது. புக்கிங் செய்யப்பட்ட கார்களின் மொத்த மதிப்பு மட்டும் ரூ20,500 கோடியாகும்.


Click it and Unblock the Notifications









