இன்னோவாவை விட ரூ.6 லட்சம் குறைவான விலை! 9 பேர் போகலாம்! மார்க்கெட்டை மிரள விடும் இந்திய நிறுவனம்!
இந்திய சந்தையில் அதிகம் பேர் மிகவும் சௌகரியமாக பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு காரை வாங்க வேண்டும் என்றால், பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது, நிச்சயம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காராகதான் இருக்கும். 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலையே 18.85 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 25.67 லட்ச ரூபாயாக இருக்கிறது. எனவே இதை விட மிகவும் குறைவான விலையில், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை வாங்க வேண்டும் என்றால், உங்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் உள்ளன.

புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிஸான் க்ராவைட் (Nissan Gravite), ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) என ஏராளமான கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். ஆனால் இந்த கார்களை விட முரட்டுத்தனமான 'லுக்' இருக்க வேண்டும் எனவும், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options) கொண்டிருக்க வேண்டும் எனவும் நீங்கள் நினைத்தால், உங்களுக்கு மற்றொரு ஆப்ஷன் இருக்கிறது.
அது மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) ஆகும். மஹிந்திரா ஸ்கார்பியோ காரானது, மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) ஆகியவை ஆகும். இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப விலை வெறும் 12.98 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.70 லட்ச ரூபாயாக இருக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரானது, 9 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப விலையும் கூட 13.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24.34 லட்ச ரூபாயாக இருக்கிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரானது, 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டர்போ டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள், இந்த காரில் வழங்கப்படுகின்றன. முரட்டுத்தனமான லுக், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள், நிறைய பேர் பயணம் செய்ய முடியும் என ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டுள்ள ஸ்கார்பியோ காருக்கு மஹிந்திரா நிறுவனம் சரியான விலையை நிர்ணயித்துள்ளது.
இதன் காரணமாக மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), RushLane தளத்தில் வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,542 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,442 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது மஹிந்திரா நிறுவனம் 100 ஸ்கார்பியோ கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 0.65 சதவீத வளர்ச்சி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட, மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் ஆரம்ப விலை 5.87 லட்ச ரூபாய் குறைவு ஆகும். எனவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மாற்றாக மிகவும் குறைவான விலையில், ஒரு காரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா ஸ்கார்பியோ மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








