புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்... பனோரமிக் சன்ரூஃப் முதல் 540° கேமரா வரை பல புதிய அம்சங்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றான மஹிந்திரா ஸ்கார்பியோ N தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2026 மாடலாக அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புற வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பல வசதிகளை மஹிந்திரா நிறுவனம் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சேர்த்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ஆரம்ப விலையாக ரூ.13.69 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஸ்கார்பியோ வரிசையில் ஸ்கார்ப்பியோ N என்ற புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான பாரம்பரிய டிசைன் அம்சங்கள் கொண்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோவிலிருந்து சற்று டிசைன் வேறுபாடுகளுடன் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முரட்டுத்தனமான தோற்றம், ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகள் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. ஆனால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பனோரமிக் சன்ரூஃப், பெரிய டிஜிட்டல் திரைகள், 360 டிகிரி கேமரா போன்ற நவீன வசதிகள் இல்லாதது குறையாக இருந்து வந்தது. அந்தக் குறைகளை சரிசெய்யும் வகையில்தான் இந்த அப்டேட் வந்துள்ளது.

Scorpio N

வெளிப்புறத்தில் புதிய க்ரோம் அலங்கார அம்சங்கள் கொண்ட முன்புற கிரில் அமைப்பு, க்ரோம் பூச்சுடன் கூடிய கதவு கைப்பிடிகள் மற்றும் புதிய 18 அங்குல டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவை இந்த எஸ்யூவிக்கு கூடுதல் வசீகரத்தை தற்போது வழங்குகின்றன. இருப்பினும், ஸ்கார்பியோ N எஸ்யூவியின் அடையாளமான அந்த கம்பீரத் தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் எதுவும் செய்யப்படவில்லை.


Variant Petrol 2WD MT Petrol 2WD AT Diesel 2WD MT Diesel 2WD AT Diesel 4WD MT Diesel 4WD AT
Z2 Rs 13.69 lakh - Rs 14.19 lakh - - -
Z4 Rs 15.57 lakh Rs 17.16 lakh Rs 16.12 lakh Rs 17.68 lakh Rs 18.03 lakh -
Z6 - - Rs 17.17 lakh Rs 18.82 lakh - -
Z8S Rs 17.79 lakh Rs 19.26 lakh Rs 18.79 lakh Rs 19.89 lakh - -
Z8 - - Rs 19.86 lakh Rs 21.41 lakh - -
Z8T Rs 20.38 lakh Rs 21.75 lakh Rs 20.65 lakh Rs 22.25 lakh Rs 22.86 lakh Rs 24.39 lakh
Z8L (ADAS) 7-Seater Rs 21.31 lakh Rs 22.87 lakh Rs 21.99 lakh Rs 23.49 lakh Rs 24.25 lakh Rs 25.49 lakh
Z8L (ADAS) 6-Seater Rs 21.69 lakh Rs 23.05 lakh Rs 22.47 lakh Rs 23.80 lakh - -

இந்த புதிய மாடலில் கேபினில்தான் அதிக சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், 540 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, 65W திறன் கொண்ட Type-C ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்கள் உள்ளிட்ட பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், தொழில்நுட்ப வசதிகளில் ஸ்கார்பியோ N தற்போது தனது போட்டியாளர்களுக்கு மிகவும் நெருக்கமாக வந்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்களிலும் கூடுதல் அம்சங்களுடன் மதிப்பு கூட்டி வந்துள்ளது. குறிப்பாக 540 டிகிரி கேமரா, இந்த பெரிய எஸ்யூவியை குறுகிய சாலைகளிலும், ஆஃப்-ரோடு பாதைகளிலும் இயக்குவதற்கு உதவியாக இருக்கும். அதேபோல் புதிய டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஓட்டுநருக்கு வாகன தகவல்களை தெளிவாகக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஏற்கனவே இருந்த 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்கவைக்கப்பட்டுள்ளன. இவை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. டீசல் மாடல்களின் டாப் வேரியண்ட்டுகளில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

சந்தையில் ஏற்கனவே உள்ள டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், ஹூண்டாய் அல்கஸார் போன்ற மாடல்களுடன் போட்டி போடும். புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் விரும்பி வந்த சக்திவாய்ந்த எஞ்ஜின்கள் மற்றும் வலுவான எஸ்யூவி அம்சங்களால் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என் மாடல் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் தேர்வில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Wednesday, August 5, 2026, 17:11 [IST]
English summary
Mahindra scorpio n facelift 2026 launched price features
மேலும்... #car review #mahindra #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out