ஸ்கார்பியோ காரையே எப்படி மாற்றி வெச்சி இருக்காங்க! மஹிந்திராவின் 20 ஆண்டு கால கார் மொத்தமா வேறயா மாறி நிற்குது

2026 மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) கார் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் தற்போது அதிகம் விற்பனையாகும் தனது ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரை ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேடிற்கு மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில், மறைக்கப்பட்ட நிலையில் ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை வாகனம் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஸ்பை படங்களில், காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் தோற்றம் நேர்த்தியாக இருப்பது, ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் கார் உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயாராகிவிட்டதைக் காட்டுகிறது. காரின் வெளிப்புறத்தில் அதிக மாறுதல்கள் செய்யப்படவில்லை; இது தற்போதைய ஸ்கார்பியோ-என் காரையே பெரிதும் ஒத்திருக்கிறது. இதன்படி, முன்பக்கத்தில் அதே கம்பீரமான தோற்றத்தைத் தக்கவைத்துள்ளது.

mahindra scorpio n facelift spotted

பரிட்சையமான இரட்டை-பாட் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் C-வடிவ வெள்ளி நிறத்திலான ஃபிரேம்களுடன் கூடிய LED ஃபாக் விளக்குகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. கிரில் மிகச் சிறிய அளவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது. ஸ்கார்பியோ காருக்கே உண்டான முரட்டுத்தனமான முன்பக்கத் தோற்றம் முன்பை விட சற்று மென்மையானதாகவும், பின்னோக்கி வளைக்கப்பட்டதாகவும் காட்சியளிக்கிறது.

பக்கவாட்டில், வழக்கமான ஜன்னல் லைன் மற்றும் இழுக்கும் வகை கதவு கைப்பிடிகள் மாறாமல் உள்ளன. மேலும், இந்த ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் அதே அளவிலான 18-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளன. ஆனால் புதிய ஸ்போக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல், காரின் உட்புறத்தில்தான் மிக முக்கியமான மாற்றங்கள் தென்படுகின்றன.

mahindra scorpio n facelift spotted

புதிய ஸ்கார்பியோ-என் கார், மிதக்கும் எஃபெக்ட் உடன் கூடிய 12.3-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைப் பெற்றுள்ளது; இது தற்போதுள்ள 8-இன்ச் திரைக்கு பதிலாக வருகிறது. அனலாக் டயல்கள் கொண்ட பெரிய மல்டி-கலர் இன்ஃபோ டிஸ்ப்ளேவிற்கு பதிலாக, டிரைவருக்கான தகவல்களை வழங்க ஃபுல்-டிஜிட்டல் டிஸ்ப்ளே (சுமார் 10.25-இன்ச் இருக்கலாம்) இடம்பெற்றுள்ளது.

தற்போதைய ஸ்கார்பியோ-என் காரில் உள்ள அதே கருப்பு மற்றும் பழுப்பு நிற தீம், டாஷ்போர்டில் மென்மையான தொடு உணர்வு கொண்ட பொருட்கள் மற்றும் அதே 3-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம் ஆகியவை தொடர்கின்றன. இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் என இரண்டிற்கும், அழுத்துவதன் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய (physical controls) பொத்தான்கள் இருப்பது பாராட்டத்தக்கது.

உள்ளே செல்வதற்கு வசதியாக, A-பில்லரில் ஒரு கைப்பிடியும் வழங்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாடுகளைப் பொறுத்தவரை, ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் காரில் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் (டால்பி அட்மாஸ் ஆதரவுடன்), பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேட்டட் இருக்கைகள் (இரண்டாம் வரிசைக்கு), மெமரி செயல்பாடுடன் டிரைவர் இருக்கை, 360-டிகிரி கேமரா அமைப்பு மற்றும் ஆறு ஏர்பேக்குகள் உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mahindra scorpio n facelift spotted

அதேநேரம் கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஹில்-ஹோல்ட் கன்ட்ரோல் மற்றும் லெவல்-2 ADAS (அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) போன்ற தற்போதைய அம்சங்கள் தொடரும். இயந்திர ரீதியாக ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட்டில் எந்த மாற்றமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. அதாவது, அதே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் தொடரப்படும்.

ஸ்கார்பியோ-என் காரில் தற்சமயம் வழங்கப்படும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 203 பிஎஸ் ஆற்றலையும், 380 என்.எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக உள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கிறது. அதேநேரம் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 175 பிஎஸ் வரையிலான ஆற்றலையும், 400 என்.எம் வரையிலான டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இதுவும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தயாரிப்புக்கு தயாராக உள்ள இந்த சோதனை வாகனத்தின் மூலம், மஹிந்திரா இந்த ஆண்டே மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தும் என்கிற நம்பிக்கை கிடைக்கிறது. ஸ்கார்பியோ-என் காரின் தற்போதைய விலையான ரூ.13.49 லட்சம் முதல் ரூ.24.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலைகளை விட புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்பது உறுதி. எம்ஜி ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்காசர் ஆகிய கார் மாடல்களுக்கு ஸ்கார்பியோ-என் போட்டியாளராக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, January 30, 2026, 14:17 [IST]
English summary
Mahindra scorpio n facelift spotted at parking lot car cabin updated check all details here
மேலும்... #mahindra #scorpio #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X