மஹிந்திரா ஸ்கார்பியோவை காராக வாங்குவதை விட இது பெஸ்ட்டு... விலையை சொல்லிட்டா புக்கிங்கை போடலாம்!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் பிரபலமான ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரின் கரடுமுரடான பிக்-அப் டிரக் (Pick-up Truck) வெர்சன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2023 ஆகஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவில் இதன் கான்செப்ட் (Concept) வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இதன் உற்பத்தி வடிவம் 2025இல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் இந்தப் பிக்-அப் டிரக் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பொது சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டு ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருவதால், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது இந்த வாகனத்தின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் (Spy Images) வெளியாகி வருகின்றன.

mahindra scorpio-n pick-up truck spotted

அந்த வகையில் தற்போது, 'யாரா__மோட்டார்ஸ்' (yara__motors) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிரப்பட்டுள்ள படங்கள், வரவிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்-அப் டிரக் பனி படர்ந்த ஒரு சாலையில் சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வாகன நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை கடுமையான வானிலை மற்றும் நிலப்பரப்பு நிலைமைகளில் சோதிப்பது இது முதல்முறையல்ல.

சோதனை வாகனம் எப்போதும் அடர்த்தியான உருமறைப்புடன் காணப்படுவது வழக்கம். அந்த வகையில், ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனமும் இதுவரையில் அனைத்து சோதனை ஓட்டங்களிலும் முழுவதும் மறைப்புடன் காட்சி தந்திருந்த நிலையில், இந்த சோதனை ஓட்டத்திலும் முழுவதும் தோற்றம் மறைக்கப்பட்ட நிலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டுள்ளது.

mahindra scorpio-n pick-up truck spotted

ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனம் ஆனது தற்போதுள்ள ஸ்கார்பியோ-என் காரை அடிப்படையாகக் கொண்டது ஆகும். அதாவது, பாதி காரின் தோற்றத்தையும், மீது பாதியில் பொருட்களை ஏற்றி செல்வதற்கான லோடு பகுதியும் உள்ளது. என்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமின்றி, உட்புறத்தைப் பொறுத்தவரையிலும், வழக்கமான ஸ்கார்பியோ-என் காரில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதி அம்சங்களையும் இந்தப் பிக்-அப் டிரக்கிலும் எதிர்பார்க்கலாம்.

இந்த புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் ஆனது விற்பனையில் இசுஸு வி-கிராஸ் (Isuzu V-Cross) மற்றும் டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) போன்ற மாடல்களுக்குப் போட்டியாக அமையும். விலையைப் பொறுத்தவரை, இது ஹிலக்ஸை விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக்கின் விலை சுமார் 25 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், இந்த வாகனத்தின் ஸ்பை படங்கள் வெளியாவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. முன்னதாக, கடந்த ஜனவரி மாத இறுதியில் 'vroomvroommj' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஸ்பைப் படங்கள், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக்கின் புதிய விவரங்களை வெளிப்படுத்தின. அந்தப் படங்களில் இந்த பிக்-அப் டிரக்கின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் தெளிவாகத் தெரிந்தது.

இந்த வாகனத்தின் வெளிப்புறத்தை நாம் அதற்கு முன்பும் பார்த்திருக்கிறோம். ஆனால், உட்புறத்தின் தெளிவான தோற்றம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வாகனத்தினுள் கண்கவர் அம்சங்களில், ஒரு பெரிய, தனித்து நிற்கும் 12 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் திரை, பழுப்பு நிற லெதரெட் இருக்கை உறைகள், பின்புற ஏசி வென்ட்கள், சென்டர் கன்சோலில் பியானோ கருப்பு நிற அலங்காரங்கள் மற்றும் உறுதியான பேனல்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாக, இந்தப் பிக்-அப் டிரக் வாகனம் வசதியாகவும், பிரீமியமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மார்க்கெட்டில் பிரபலமான ஸ்கார்பியோ-என் காரின் அடிப்படையில் வருவதால், இந்தப் பிக்-அப் டிரக் இசுஸு வி-கிராஸ் மற்றும் டொயோட்டா ஹிலக்ஸ் ஆகியவற்றுக்கு இந்திய சந்தையில் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்பது தெளிவாகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 9, 2026, 21:04 [IST]
English summary
Mahindra scorpio n pick up truck performed tests on snow track check all details here
மேலும்... #mahindra #scorpio #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+