சர்ப்ரைஸ் கொடுத்த மஹிந்திரா... நாளை அறிமுகமாகிறது ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக்! முக்கிய விபரம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ என் பிக்கப் டிரக் நாளை (ஆகஸ்ட் 14) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை உறுதி செய்யும் விதத்தில் டீசர் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் மூலமாக புதிய ஸ்கார்ப்பியோ என் பிக்கப் டிரக்கின் சில முக்கிய டிசைன் அம்சங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என் பிக்கப் டிரக் மாடலானது டபுள் கேபின் அமைப்புடன் வர உள்ளது. அதாவது, இரட்டை வரிசை இருக்கை அமைப்புடன் ஓட்டுனரை சேர்ந்து கேபினில் 5 பேர் வரை பயணிக்க முடியும். முன்புறத்தில் பெரிய க்ரில் அமைப்பு, மெல்லிய எல்இடி ஹெட்லைட்டுகள் டிசைன் மற்றும் தனித்துவமான எல்இடி பகல்நேர விளக்குகள் வசீகரிக்கும் அம்சங்களாக உள்ளன.

பின்புறத்தில் செங்குத்தான அமைப்புடன் கூடிய எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. டெயில் கேட்டில் பெரிய அளவில் மஹிந்திரா பெயர் பதிக்கப்பட்டுள்ளது. கச்சிதமான பின்புற பொருட்களை வைப்பதற்கான கார்கோ பெட் உள்ளது. மொத்ததில் தனிநபர் பயன்பாட்டு பிரிவை நோக்கிய பிரிமீயம் ரக பிக்கப் டிரக் மாடலாக வர இருப்பது வெளிப்புறத்தை வைத்தே கூறி விடலாம்.

உட்புறத்திலும் அதிக பிரிமீயம் அம்சங்கள் இருப்பது தெரிகிறது. முதல்முறையாக மஹிந்திரா நிறுவனம் இந்த பிக்கப் டிரக்கில் பனோரமீக் சன்ரூஃப் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரிய தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

Mahindra Scorpio N Pick Up

புதிய ஸ்கார்ப்பியோ என் பிக்கப் டிரக்கில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. உயர் வேரியண்ட்டுகளில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெறும். இருப்பினும், நாளைதான் இதுகுறித்த பல முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என் பிக்கப் டிரக் மாடலானது இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பல வெளிநாட்டு சந்தைகளிலும் விற்பனைக்கு செல்லும் என்று தெரிகிறது. டொயோட்டா ஹைலக்ஸ் உள்ளிட்ட பிரிமீயம் ரக பிக்கப் டிரக் மாடலுக்கு எதிராகவும் நிலைநிறுத்தபடலாம். விலை, எஞ்சின், வசதிகள் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்கள் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Thursday, August 13, 2026, 10:43 [IST]
English summary
Mahindra scorpio n pickup truck teaser released ahead india launch
மேலும்... #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out