போட்டி மாடல்களுக்கு எல்லாம் அப்பன்! 9 பேர் போக கூடிய காரை இந்த ரேட்ல விக்கறாங்களா! மிரள விடும் இந்திய நிறுவனம்
இந்தியாவை பொறுத்தவரை எஸ்யூவி ரக கார்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்த கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). அதனால்தான் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோவை எஸ்யூவி கார்களின் 'பிக் டாடி' (Big Daddy) என கூறுகிறது.
எஸ்யூவி கார்களின் தலைவராக கருதப்படும் மஹிந்திரா ஸ்கார்பியோவின் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. AUTO PUNDITZ தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15,885 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் அதற்கு முந்தைய டிசம்பர் மாதத்தில், அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12,195 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3,690 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனையில் 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars December 2025), 9வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 8 இடங்களில் முறையே மாருதி சுஸுகி பலேனோ, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டாடா பன்ச் ஆகிய கார்கள் உள்ளன.
இந்த வரிசையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் 9வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) ஆகியவை ஆகும்.
இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் 12.98-16.70 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரானது, 13.49-24.34 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரானது 9 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரானது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு முரட்டுத்தனமான எஸ்யூவி காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் காரின் அடிப்படையில் தற்போது பிக்-அப் டிரக் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த பிக்-அப் டிரக்கின் வருகைக்கு பின்னர் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








