மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்? Thar Roxx டிசைன், புதிய வசதிகளுடன் 3-டோர் தார் வருகிறது!!

ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களின் மிகச் சிறந்த தேர்வாக உள்ள மஹிந்திரா தார் விரைவில் மீண்டும் சில முக்கிய அப்டேட்டுகளுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே சாலை சோதனைகளுக்கு உட்படுத்தபட்டுள்ள இந்த 3 டோர் தார் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த மாதமே அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய பதிப்பு மூலமாக தார் எஸ்யூவியின் வடிவமைப்பிலும், வசதிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கிடைக்க உள்ளன.

சாலை சோதனைகளில் இருக்கும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தார் ராக்ஸ் எஸ்யூவியில் இடம்பெற்றுள்ள வடிவமைப்பு அம்சங்கள் இந்த புதிய தார் ஃபேஸ்லிஃப்ட் 3 டோர் மாடலில் இடம்பெறும் என்று தெரிய வருகிறது. குறிப்பாக, முன்புற க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பம்பர், புதிய அலாய் வீல்களுடன் டிசைன் மாற்றங்களுடன் டெயில் விளக்குகளின் வடிவமைப்பில் மாற்றங்கள் இருக்கும்.

Mahindra Thar 3 Door

(Representative Image - Current Mahindra Thar 3 Door Model)

உட்புறத்தை பொறுத்தவரையிலும் தற்போதைய மாடலைவிட கூடுதல் வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். தார் ராக்ஸ் மாடலில் இருந்து சில முக்கிய வசதிகள் இந்த புதிய 3 டோர் மாடலில் கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தார் ராக்ஸ் மாடலில் உள்ளது போன்ற ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், கதவுகளில் பவர் விண்டோஸ் சுவிட்சுகள், முன்புற இருக்கைக்கு இடையில் ஆர்ம் ரெஸ்ட், வயர்லெஸ் சார்ஜர், ரிவர்ஸ் கேமரா போன்றவை எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தார் 3 டோர் மாடலில் உள்ள ஹைட்ராலிக் ஸ்டீயரிங் சிஸ்டத்திற்கு பதிலாக எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் கொடுக்கபப்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலமாக, ஆஃப்ரோடு பயன்பாடு மட்டுமின்றி, தினசரி பயன்பாட்டிற்கும் ஏதுவான அம்சங்களை இந்த புதிய மாடல் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், எஞ்சினில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று தெரிகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதிகள் தொடர்ந்து கொடுக்கப்படும். புதிய மாடலில் 152 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 119 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 132 எச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழக்கம்போல் தக்க வைக்கப்படும். மேலும், 4 வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் தேர்வுகளும் இருக்கும்.

தற்போது உள்ள தார் 3 டோர் மாடலானது ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.10 லட்சத்தையொட்டிய விலையில் சற்றே கூடுதலான ஆரம்ப விலையில் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் புதிய தார் 3 டோர் மாடலானது டிசைன், வசதிகளில் ஒருபடி மேலே இருக்கும் என்பதால், வழக்கம்போல் வாடிக்கையாளர் வட்டத்தை தொடர்ந்து தக்க வைக்கும். ஆஃப்ரோடு பிரியர்கள் மடடுமின்றி, தினசரி குடும்ப பயன்பாட்டிற்கும் ஏற்ற மாடலாக இதனை நிலைநிறுத்தும் முயற்சியாக இந்த புதிய மாடல் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேநேரத்தில், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கான அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து தக்க வைக்கும்.

Source - Carwale

Article Published On: Sunday, August 9, 2026, 9:53 [IST]
English summary
Mahindra thar 3 door facelift india launch august
மேலும்... #thar #mahindra #mahindra thar
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out