உங்களுக்குப் பிடிச்ச ஆஃப்-ரோடு எஸ்யூவி.. இப்போ இன்னும் விலை கூடிடுச்சு.. 4 மாசத்துல இது ரெண்டாவது முறை!
இந்தியாவில் ஆஸ்தான லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடலான தாரின் விலையை உயர்த்தியிருக்கிறது மஹிந்திரா. கடந்த நான்கு மாதங்களில் இது இரண்டாவது விலை உயர்வாகும். ஏற்கனவே ஜனவரி மாதம் இந்தக் காரின் விலையை ஒருமுறை உயர்த்தியது மஹிந்திரா. தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஜனவரி மாதம் இந்தத் தார் எஸ்யூவி மாடலின் விலையை ரூ.20,000 வரை உயர்த்தியது அந்நிறுவனம். தற்போது மீண்டும் ரூ.43,500 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. வேரியன்டிற்கு ஏற்ப விலை உயர்விலும் மாற்றம் இருக்கிறது. மஹிந்திரா தார் எத்தனை வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்றும் எந்த வேரியன்டின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது ஆகிய விவரங்களை எல்லாம் பார்க்கலாம்.

இந்த 3 டோர்கள் கொண்ட லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடலை AXT மற்றும் LXT என இரண்டே இரண்டு வேரியன்ட்களாக மட்டுமே விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா. இதில் AXT வேரியன்டானது ஒரேயொரு பவர்ட்ரெயின் தேர்வுடன், ஒரேயொரு ட்ரிம்மாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 2 வீல் டிரைவ் என்ற ஒற்றை கான்ஃபிகரேஷனில் மட்டுமே இந்த AXT வேரியன்டை நாம் வாங்க முடியும்.
இந்த வேரியன்டின் விலையில் எந்த மாற்றத்தையும் மஹிந்திரா செய்யவில்லை. இந்த அடிப்படை வேரியன்டின் விலையை ரூ.9.99 லட்சமாக அப்படியே தான் வைத்திருக்கிறது அந்நிறுவனம். ஜனவரி மாதமும் இந்த AXT வேரியன்டின் விலையை மஹிந்திரா உயர்த்தவில்லை. மற்ற வேரியன்டின் விலைகளையே உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக LXT வேரியன்ட். இந்த வேரியன்டினை 1.5 லிட்டர் டீசல் (2 வீல் டிரைவ்), 2.0 லிட்டர் பெட்ரோல் (4 வீல் டிரைவ்), 2.2 லிட்டர் டீசல் (4 வீல் டிரைவ்) ஆகிய மூன்று மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்களாகவும், 2.0 லிட்டர் பெட்ரோல் (2 வீல் டிரைவ்), 2.0 லிட்டர் பெட்ரோல் (4 வீல் டிரைவ்), 2.2 லிட்டர் டீசல் (4 வீல் டிரைவ்) ஆகிய மூன்று ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்களாகவும் விற்பனை செய்கிறது மஹிந்திரா.
இதில் டாப் எண்டான LXT 2.2 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் 4 வீல் டிரைவ் ட்ரிம்மின் விலையே ரூ.43,500 வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அடுத்ததாக 2.0 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 4 வீல் டிரைவ் ட்ரிம்மின் விலை ரூ.41,500 வரையிலும், 2.2 லிட்டர் டீசல் மேனுவல் 4 வீல் டிரைவ் ட்ரிம்மின் விலை ரூ.39,500 வரையிலும் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
LXT வேரியன்டின் இரண்டு 2 வீல் டிரைவ் வசதி கொண்ட ட்ரிம்களும் ரூ.30,500 வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளன. LXT 2.0 லிட்டர் பெட்ரோல் மேனுவல் 4 வீல் டிரைவ் ட்ரிம்மின் விலை ரூ.37,500 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து இந்த லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடலானது இனி ரூ.9.99 லட்சம் முதல் ரூ.17.63 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டின் விலை ரூ.14.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்குகிறது. டாப் எண்டான ரூ.17.63 லட்சம் விலை கொண்ட ட்ரிம் மட்டுமே டீசல் ஆட்டோமேட்டிக் பவர்ட்ரெயினைக் கொண்டுள்ளது. 4 வீல் டிரைவ் மேனுவலின் விலை ரூ.15.26 லட்சத்திலும், 4 வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக்கின் விலை ரூ.16.86 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் தொடங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் விலையை உயர்த்தினாலும் அடிப்படை வேரியன்டின் விலையை உயர்த்தாதது மஹிந்திராவின் மாஸ்டர் பிளான். இதன் மூலம் காரின் தொடக்கவிலையில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.10 லட்சத்திலேயே தொடர்கிறது. இந்த விலை உயர்வைக் கடந்து விரைவிலேயே அதன் அப்டேட்டட் வெர்ஷையும் வெளியிட மஹிந்திரா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








