இந்திய ராணுவம் களமிறக்க போகும் புதிய வாகனம்... பார்த்து பார்த்து உருவாக்கியது அவங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX). இதன் அடிப்படையில் 'ஏடிவி' என சுருக்கமாக அழைக்கப்படும் 'ஆல் டெர்ரெயின் வெய்கில்' (ATV - All Terrain Vehicle) ஒன்றை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ளது. 'ஆல் டெர்ரெயின் வெய்கில்' என்பது அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் பயணிப்பதற்கு ஏற்றது ஆகும்.

இந்திய ராணுவத்திற்காக மஹிந்திரா நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் 'நார்த் டெக் சிம்போஸியம்' (North Tech Symposium) நிகழ்ச்சியில், மஹிந்திரா தார் ராக்ஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 'ஆல் டெர்ரெயின் வெய்கில்' காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Mahindra Thar ROXX Based ATV

அதன் வைரல் வீடியோ SF Boys 'எக்ஸ்' (ட்விட்டர்) தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த வாகனம் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக காட்சியளிக்கிறது. எனவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வித்தியாசமான கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த வாகனத்தில் மொத்தம் 3 வரிசை இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், முதல் 2 வரிசை இருக்கைகள் முன்னோக்கி பார்ப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 வரிசைகளிலும் ஒட்டுமொத்தமாக 5 பேர் அமரலாம். அதே நேரத்தில் மூன்றாவது வரிசையில் வழங்கப்பட்டுள்ள 2 இருக்கைகள் பக்கவாட்டு நோக்கி பார்ப்பது போல் அமைக்கப்பட்டுள்ளன. எனவே ஒட்டுமொத்தமாக இந்த காரில் 7 பேர் பயணம் செய்ய முடியும்.

Mahindra Thar ROXX Based ATV Front View

அதே நேரத்தில் இந்த வாகனத்தில் வழக்கமான கதவுகள் இல்லை. அதற்கு பதிலாக 'மெட்டல் பைப்கள்' கொடுக்கப்பட்டுள்ளன. எடையை குறைப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது ஏறுவது மற்றும் இறங்குவதையும் எளிதாக்கும். கதவுகள் மட்டுமல்லாது, இந்த வாகனத்தில் மேற்கூரையும் இல்லை. ஆனால் வழக்கமான மஹிந்திரா தார் ராக்ஸ் காரில், கதவுகள் மற்றும் மேற்கூரை இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இந்த வாகனத்தின் மேலே துப்பாக்கியையும் பொருத்தி கொள்ள முடியும். அதற்கான வசதிகளை இந்த வாகனம் கொண்டுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் இந்த வாகனத்தில் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 172 ஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4x4 சிஸ்டத்தையும் இந்த வாகனம் கொண்டுள்ளது. வழக்கமான மஹிந்திரா தார் ராக்ஸ் காரில் இந்த இன்ஜின் உடன் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த 'ஆல் டெர்ரெயின் வெய்கில்' பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமாக உள்ளது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை இந்திய ராணுவத்திற்கு என பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது. எனவே பொதுமக்களால் இந்த வாகனத்தை வாங்க முடியாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Article Published On: Wednesday, May 6, 2026, 12:41 [IST]
English summary
Mahindra thar roxx based atv showcased in india viral video and all details
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+