3 டோர் தார் OG போல 5 டோர் தார் ராக்ஸ் எஸ்யூவியிலும் வரும் முக்கிய மாற்றங்கள்!

மஹிந்திரா தார் காரை விரும்புபவர்களுக்கு அதன் தோற்றம், சாலைகளில் கிடைக்கும் கம்பீரம், கரடுமுரடான பாதைகளிலும் பயணிக்கும் திறன் ஆகியவை முக்கியமானதாக இருக்கின்றன. ஆனால், தினசரி நகரப் பயணங்களிலும் குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்லும்போதும் சொகுசான பயண அனுபவத்தை பெற வேண்டும் என்பதும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தார் ராக்ஸ் எஸ்யூவியில் புதிய மாற்றங்களுடன் வர இருக்கிறது.

அண்மையில் புதிய அப்டேட்டுகளுடன் 3 டோர் கொண்ட தார் மாடலை தார் OG என்ற பெயரில் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, 5 கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் எஸ்யூவியிலும் அதே மாதிரியான சில முக்கியமான தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சஸ்பென்ஷன் அமைப்பிலும், சக்கரங்களின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Thar Roxx

முக்கிய மாற்றம் என்ன?

தார் ஓஜி மாடலில் இடம்பெற்றுள்ள டாவின்சி அதிர்வு தாங்கும் தொழில்நுட்பம், தார் ராக்ஸ் காரிலும் அறிமுகமாக உள்ளது. தற்போதைய தார் ராக்ஸ் காரில் பின்புறத்தில் ஐந்து இணைப்புகளைக் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், சாலை நிலைக்கு ஏற்ப செயல்படும் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளன.

Also Read

இனி எல்லாம் சுகமே?

டாவின்சி அதிர்வு தாங்கும் அமைப்பில் பயன்படுத்தப்படும் பிரத்யேக எந்திர வால்வுகள், சாலை நிலைக்கு ஏற்ப செயல்படும் ஹைட்ராலிக் சிஸ்டம் போன்றவை அதிர்வுகளை காருக்குள் செல்லதவாறு தவிர்க்கும். இதனால், அதிர்வுகள் குறைவான பயண அனுபவத்தையும், நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும்போது அதிக நிலைத்தன்மையுடன் செல்ல உதவி புரியும். இதனால், நீண்ட தூர பயணங்களுக்கும் சிறந்த அம்சங்களை தார் ராக்ஸ் பெறும்.

சஸ்பென்ஷன் அமைப்பில் செய்யப்படும் முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக மோசமான சாலைகளில் மட்டுமில்லாமல், சாதாரண மற்றும் நெடுஞ்சாலை பயணங்களையும் சிறப்பானதாக மாற்றும். அதிக வேகத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும்போதும், வளைவுகளில் திரும்பும்போதும் காரின் உடல்கூடு அதிகமாகச் சாய்வதைக் கட்டுப்படுத்துவது இதன் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.

Also Read

புதிய அலாய் சக்கரங்கள்

தார் ராக்ஸ் காரின் வெளிப்புறத் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாமல், புதிய வடிவமைப்பிலான அலாய் சக்கரங்கள் இடம்பெறலாம். மேலும், அண்மையில் வந்த தார் ஓஜி காரில் பயன்படுத்தப்படும் அதே டிசைனிலான புதிய அலாய் வீல்கள் இந்த காரிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நடுத்தர மற்றும் உயர்நிலை வகைகளில் இந்த மாற்றம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எஞ்சின் மாற்றங்கள் உண்டா?

தற்போதைய தகவல்களின்படி, தார் ராக்ஸ் காரில் உள்ள இரண்டு லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 2.2 லிட்டர் டீசல் எஞ்சினும் தொடர்ந்து வழங்கப்படும். இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகளும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்சக்கர இயக்கம் மற்றும் நான்கு சக்கர இயக்கத் தேர்வுகளும் வகையைப் பொறுத்து கிடைக்கலாம். தார் ஓஜி மாடலில் எஞ்சின் செயல்திறனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், தார் ராக்ஸ் காரிலும் சிறிய அளவில் செயல்திறன் அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

வசதிகள்

தற்போதைய தார் ராக்ஸ் காரில் 10.25 அங்குல தொடுதிரை, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கண்ணாடிக் கூரை, வென்டிலேட்டட் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள் மற்றும் குறிப்பிட்ட வகைகளில் மேம்பட்ட ஓட்டுனர் உதவி வசதிகள் உள்ளன. புதிய தார் ராக்ஸ் மாடலிலும் இந்த வசதிகளை எதிர்பார்க்கலாம்.

எப்போது அறிமுகம்?

தார் ராக்ஸ் காரின் புதிய ஓஜி மாடலானது சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த புதிய மாடல் சந்தைக்கு வந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய தார் ராக்ஸ் காரை வாங்கத் திட்டமிடுபவர்கள், மேம்படுத்தப்பட்ட மாடலுக்காகக் காத்திருக்கலாமா என்பதைத் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.

குறிப்பாக, பயண வசதி மற்றும் நெடுஞ்சாலைப் பயணத்தில் நிலைத்தன்மை ஆகியவை முக்கியமானவை என்றால் புதிய அதிர்வு தாங்கும் அமைப்பு கவனிக்க வேண்டிய அம்சமாக இருக்கும். இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிமுகத் தேதி தெரியாததால் காத்திருப்பதன் அவசியத்தையும் மதிப்பிட வேண்டும்.

Article Published On: Monday, October 12, 2026, 13:11 [IST]
English summary
Mahindra thar roxx major updates thar og suspension alloy wheels launch timeline
மேலும்... #mahindra #mahindra thar
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out