இந்த பேட்ஜ் மட்டும் இருந்தா ஊரே உங்களை கெத்தா பாக்கும்! மஹிந்திரா களமிறக்கிய புதிய காரின் விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx). இது மஹிந்திரா தார் காரின் 5 டோர் (5 Door) வெர்ஷன் ஆகும். மஹிந்திரா தார் காரானது, 3 டோர் (3 Door) ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைத்து வருகிறது.
இது நடைமுறை பயன்பாட்டில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியதால்தான், மஹிந்திரா நிறுவனம் தார் காரின் 5 டோர் வெர்ஷனை ராக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த வரிசையில் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) மாடல் ஒன்று தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல், ஸ்டார் எடிசன் (Star Edition) என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மஹிந்திரா தார் ராக்ஸ் ஸ்டாண்டர்டு மாடல் உடன் ஒப்பிடும்போது ஸ்டார் எடிசன் மாடலில் டிசைன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், ஸ்டார் எடிசன் பேட்ஜ் போன்ற அம்சங்களை எல்லாம் இது கொண்டுள்ளது.
மஹிந்திரா தார் ராக்ஸ் ஸ்டார் எடிசன் மாடலானது, சிட்ரைன் யெல்லோ, டாங்கோ ரெட், எவரெஸ்ட் ஒயிட் மற்றும் ஸ்டீல்த் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும். மஹிந்திரா தார் ராக்ஸ் ஸ்டார் எடிசன் மாடலில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 9 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஆனால் மஹிந்திரா தார் ராக்ஸ் ஸ்டார் எடிசன் மாடலில் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) வசதி வழங்கப்படவில்லை. இருப்பினும் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம், மஹிந்திரா தார் ராக்ஸ் ஸ்டார் எடிசன் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா தார் ராக்ஸ் ஸ்டார் எடிசன் மாடல் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல்/ஆட்டோமேட்டிக், 2.2 லிட்டர் டர்போ டீசல்/மேனுவல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல்/ஆட்டோமேட்டிக் ஆகியவை ஆகும்.
இவற்றின் விலை முறையே 17.85 லட்ச ரூபாய், 16.85 லட்ச ரூபாய் மற்றும் 18.35 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாலையில் தனித்து தெரிய வேண்டும் என விரும்புபவர்கள் மஹிந்திரா தார் ராக்ஸ் ஸ்டாண்டர்டு மாடலுக்கு பதிலாக ஸ்டார் எடிசன் மாடலை தேர்வு செய்யலாம். ஸ்டார் எடிசன் மாடலின் வருகை காரணமாக, மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








