விஜய் ஆட்சி முடிவதற்குள் முன்னணி நிறுவனம் செய்ய போகும் காரியம்! சுனாமி அலையே வீச போகுது!
இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவன கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு மஹிந்திரா நிறுவனம் எடுத்து வரும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளே மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. இந்த வரிசையில் எதிர்காலத்தில் இன்னும் ஒரு சில முக்கியமான நடவடிக்கைகளை மஹிந்திரா நிறுவனம் எடுக்கவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இந்திய சந்தையில் வரும் 2031ம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்தமாக 16 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது இந்திய சந்தையில் மஹிந்திரா சுனாமி வீச போகிறது. இந்த 16 கார்களில் 6 எலெக்ட்ரிக் கார்களும், 10 ஐசி இன்ஜின் கார்களும் அடங்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக மஹிந்திரா நிறுவனம் இதை அறிவித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் எதிர்காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள கார்கள் NU_IQ பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படும். இது மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய பிளாட்பார்ம் ஆகும். இந்த பிளாட்பார்ம் மூலம் எலெக்ட்ரிக் மற்றும் ஐசி இன்ஜின் என 2 வகையான கார்களையும் உருவாக்க முடியும்.
இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் ஏற்கனவே 4 கான்செப்ட் மாடல்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு விட்டது. அவை மஹிந்திரா விஷன் எஸ், மஹிந்திரா விஷன் எக்ஸ், மஹிந்திரா விஷன் டி மற்றும் மஹிந்திரா விஷன் எஸ்எக்ஸ்டி ஆகியவை ஆகும். இது குறித்து டீம் பிஹெச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மறுபக்கம் மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்கால ஐசி இன்ஜின் கார்களை பொறுத்தவரையில் ஒன்று தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடல் ஆகும். எஞ்சிய 9 கார்களும் புத்தம் புதியவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில், முதல் கார் வரும் 2027ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காடிவாடி தளத்தின் தரவுகளின்படி பார்த்தால், இந்திய சந்தையில் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் அதிகமான கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திரா 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 1,87,704 கார்களுடன் மாருதி சுஸுகி முதல் இடத்தையும், 59,000 கார்களுடன் டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த வரிசையில் 56,331 கார்களை விற்பனை செய்து மஹிந்திரா நிறுவனம் இந்த பட்டியலில் 3வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே மஹிந்திரா நிறுவனம் பல்வேறு புதிய கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு எல்லாம் மஹிந்திரா நிறுவனம் தற்போது மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வகையான கார்களின் விற்பனையும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
இந்த சூழலில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கார்களின் வருகை, இந்திய சந்தையில் அதன் ஆதிக்கத்தை மேலும் வலிமையாக்கி கொள்ள உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம். மஹிந்திரா நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களை பொறுத்தவரையில், சிஎன்ஜி வெர்ஷன்களும் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் சிஎன்ஜி வெர்ஷன், நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications