பவர்ஃபுல்லான டீசல் இன்ஜினை புதிய எஸ்யூவியில் கொடுக்கும் நிறுவனம்.. பட்டைய கிளப்ப போகுது

மஹிந்திரா என்ற பெயரைக் கேட்டவுடன் உங்கள் நினைவிற்கு வரும் கார் எது. சந்தேகமே இல்லாமல் ஸ்கார்பியோ தான். கார்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாத வாடிக்கையாளர்களுக்குக் கூட மஹிந்திரா என்ற பெயரைச் சொன்னவுடன் ஸ்கார்பியோவின் வடிவம் தான் முதலில் நினைவிற்கு வரும். அந்தளவிற்கு மக்களிடம் மஹிந்திராவின் பிராண்டைப் பதிய வைத்த, தாக்கம் ஏற்படுத்திய கார் ஸ்கார்பியோ.

இந்தக் காரை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது மஹிந்திரா. மேம்படுத்தப்பட்டு வரும் ஸ்கார்யியோ N காரை தற்போது முழுவதும் மறைக்கப்பட்ட வகையில் இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இரண்டு வகையான ஸ்கார்பியோ கார்கள் தற்போது மஹிந்திராவின் லைன்-அப்பில் விற்பனையில் இருக்கின்றன. ஒன்று ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாஸிக்.

Mahindra Scorpio N

ஸ்கார்பியோ கிளாஸிக் என்பது பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் ஒரிஜினில் ஸ்கார்பியோ எஸ்யூவி மாடல். மாடர்னாக இப்போது நாம் பார்க்கும் எஸ்யூவியாக இல்லாமல், மெக்கானிக்கல் அம்சங்கள் நிறைந்த, குறைவான தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஓல்டு ஸ்கூல் எஸ்யூவியாக ஸ்கார்பியோ கிளாஸிக் இருக்கும். அதன் மாடர்ன் வடிவம் தான் ஸ்கார்பியோ N. தற்போது மஹிந்திரா மேம்படுத்தி வருவது இந்த ஸ்கார்பியோ N மாடலைத் தான்.

மேம்படுத்தப்பட்டு வரும் ஸ்கார்பியோ N ஃபேஸ்லிப்ட் மாடலில் என்னென்ன மாற்றங்களை மஹிந்திரா செய்யலாம் என்பதை இங்கே நாம் பார்க்கலாம். முதலில் டிசைன், ஃபேஸ்லிப்ட் என்பதால் சின்னச் சின்ன டிசைன் மாற்றங்களே புதிய ஸ்கார்பியோ N மாடலில் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக முகப்புப் பக்கத்தில் புதிய முகப்பு விளக்குகள் மற்றும் DRL-கள் கொண்ட வடிவமைப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra Scorpio N

பக்கவாட்டில் அலாய் வீல்கள் மட்டும் புதிய வடிவில் கொடுக்கப்படவிருக்கிறது. பின்பக்கமும் விளக்குகள் புதிதாக மாற்றப்படலாம். முன்பக்கமும் பின்பக்கம் புதிய பம்பர்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றைத் தவிர ஆங்காங்கே சின்னச் சின்ன டிசைன் மாற்றங்களும் புதிய ஸ்கார்பியோ N எஸ்யூவியில் எதிர்பார்க்கப்படுகின்றன. காரின் உட்புறமும் புதிய வசதிகள் பலவற்றை இந்த முறை மஹிந்திரா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேஷ்போர்டில் தற்போது இருப்பதை விட சற்று பெரிதாக 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய மாடர்னான ஸ்டீயரிங் வீல், பனோரமிக் சன்ரூஃப், அதிக பெர்ஃபாமன்ஸ் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா, இரண்டு வரிசைகளிலும் வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், பவர்டு டெயில்கேட் ஆகிய வசதிகளை புதிய ஸ்கார்பியோ N காரில் மஹிந்திரா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லெவல் 2 ADAS உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் தற்போதைய காரில் இருப்பது அப்படியே புதிய காருக்கும் கடத்தப்படும்.

பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமில்லாமல், பவர்ட்ரெயினையும் தற்போதையே காரில் இருப்பதையே புதிய ஸ்கார்பியோ N மாடலிலும் நாம் எதிர்பார்க்கலாம். தற்போதைய காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும் மேனுவல் மற்றும் டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் 4 வீல் டிரைவ் வசதியும் உண்டு. இந்த மெக்கானிக்கல் அம்சங்களை அப்படியே புதிய காரிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினே மஹிந்திராவின் XUV 7XO உள்ளிட்ட வேறு சில எஸ்யூவிக்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும் இந்த ஸ்கார்பியோ N காரில் சற்று குறைவான பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் இந்த டீசல் இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. புதிய காரில் முழுமையான பவரை வெளிப்படுத்தும் வகையிலான டீசல் இன்ஜினை மஹிந்திரா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கார்பியோ N காரில் அதிகபட்சமாக 170 hp பவர் மற்றும் 400 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனையே இதன் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் கொணடிருக்கிறது. அதுவும் ஆட்டோமேட்டிக் வேரியன்டில் தான். மேனுவல் கியர்பாக்ஸ் வேரியன்டில் டார்க்கின் அளவு அதிகபட்சமாக 370 Nm தான்.

இதே டீசல் இன்ஜின் XUV 7XO எஸ்யூவியில் 182 hp பவர் மற்றும் 450 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. அதே அளவு திறனை திரனை ஸ்கார்பியோவிலும் மஹிந்திரா கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிறப்பான எஸ்யூவிக்களில் ஒன்றாக ஸ்கார்பியோவே நாம் சொல்லலாம். மஹிந்திராவிற்கு அதிகம் விற்பனையாகும் காராகவும் ஸ்கார்பியோவே இருந்து வருகிறது. மேலே கூறியது போல மெக்கானிக்கலாகவும் N மாடலை மஹிந்திரா அப்டேட் செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் ஆஸ்தான எஸ்யவியாகக் கூட இந்த ஸ்கார்பியோ மாறிவிடும். மஹிந்திரா என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Wednesday, May 20, 2026, 20:24 [IST]
English summary
Mahindra to update scorpio n with a facelift version soon testing ongoing
மேலும்... #mahindra #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+