நாட்டின் நம்பர் ஒன் கம்பெனியின் புதிய டிராக்டர்! பேன்-இந்தியா அளவில் அறிமுகம்!
இந்தியாவின் நம்பர் ஒன் டிராக்டர் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக 'மஹிந்திரா யுவோடெக்+ 585 DI V1' என்கிற பல விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய பவர்ஃபுல்லான டிராக்டரின் அறிமுகத்தை அறிவித்துள்ளது. அதற்கேற்ப இந்த டிராக்டரின் செயல்படுதிறன் மேம்பட்டதாகவும், வெவ்வேறான நிலப்பரப்புகளில் வாழும் விவசாயிகளுக்கு சிறப்பான சவுகரியமான பயணத்தை வழங்கக்கூடியதாகவும் உள்ளது.
2-வீல்-டிரைவ் மற்றும் 4-வீல்-டிரைவ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய யுவோடெக்+ 585 DI V1 டிராக்டரில் மஹிந்திராவின் அதிக கன திறன் கொண்ட அதிநவீன எம்-புல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் மூலமாக, டிராக்டரின் இழுக்கும் திறன் ஆனது மிகவும் வலிமையானதாக உள்ளது.

மேலும், இதற்காக 30% டார்க் திறனும் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால், சவாலான சூழல்களிலும் இந்த டிராக்டரை எளிதாக கையாளலாம். நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும் திறன் மற்றும் அதிக உற்பத்தி திறனுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இந்த டிராக்டரில் 12F+3R டிரான்ஸ்மிஷன் சிஸ்டம், மல்டி-ஸ்பீடு PTO மற்றும் SLIPTO ட்யூயல்-க்ளட்ச் மெக்கானிசமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த டிராக்டரின் ஹை-மீடியம்-லோ கியர் சிஸ்டம் ஆனது பல்வேறு விதமான விவசாய பயணிகளை மேற்கொள்வதற்கு வழிவகை செய்கிறது. இவற்றுடன், ஹைட்ராலிக் சிஸ்டத்தையும் கொண்டுள்ள இந்த டிராக்டரில் ஸ்டாபிளைசர் பார் மற்றும் நீளமான டாப் லிங்க் உள்ளிட்டவை பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடியதாக இந்த டிராக்டரை விளங்க வைக்கின்றன.
நீண்ட நேர இயக்கத்திற்கு ஏற்ப, இந்த டிராக்டரில் டிரைவரை சுற்றிலும் ஏதுவான பயண சூழல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, போதுமான இடவசதிகள் மற்றும் குஷின்களை கொண்ட இருக்கைகள் இந்த புதிய மஹிந்திரா டிராக்டரில் வழங்கப்பட்டுள்ளன. புதிய யுவோடெக்+ 585 DI V1 டிராக்டரின் அறிமுகம் குறித்து மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ஹர்ஷ் ராய் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெற்றிக்கரமாக அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் யுவோடெக்+ 585 DI V1 டிராக்டரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வேகமாக வளர்ந்துவரும் எங்கள் யுவோடெக் தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள்ள இந்த புதிய டிராக்டர் ஆனது மேம்பட்ட தொழிற்நுட்பம், வலிமையான செயல்திறன் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளது.
இது விவசாயிகளுக்குத் தரமான, நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் நீண்ட கால மதிப்பளிக்கக்கூடிய் தயாரிப்புகளை வழங்குவதில் எங்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. நாடு தழுவிய அளவிலான இந்த அறிமுகத்தின் மூலம், விவசாயிகளின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, நம்பகமான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒரு தீர்வை அவர்களுக்கு வழங்க நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனத்தின் புதிய யுவோடெக்+ 585 DI V1 ஆனது பவர்ஃபுல்லான பெர்ஃபார்மன்ஸ், மாடர்ன் தொழிற்நுட்பம் மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதான வசதிகள் உடன் ஒரு முழு கலவையாக உள்ளது. ஆதலால் இது குறிப்பாக, வேளாண் சார்ந்த பணிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்த புதிய டிராக்டருக்கு 6 வருடங்களுக்கான உத்தரவாதத்தை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மஹிந்திரா டிராக்டர்ஸ் ஷோரூம்களிலும் கிடைக்கும். கார்களை உற்பத்தி செய்வதற்கு முன்பு இருந்தே கடந்த பல வருடங்களாக டிராக்டர்கள் உற்பத்தி & விற்பனையில் ஈடுப்பட்டுவரும் மஹிந்திரா நிறுவனம் இதற்காக ஜப்பானிய உயரிய விருதையும் பெற்றுள்ளது.
டிராக்டர் தற்போதைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து மாற்றம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications